ஆம்ஸ்ட்ராங் கொலை 'சம்பவம்' செந்திலின் பரம எதிரியான காக்கா தோப்பு பாலாஜி..ரவுடியானது எப்படி தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ரவுடிகளான நாகேந்திரனின் முன்னாள் சிஷ்யனாகவும் சம்பவம் செந்தில் என்ற சம்போ செந்திலின் பரம எதிரியாகவும் காக்கா தோப்பு பாலாஜி வடசென்னையை கதிகலக்கி வந்த நிலையில் இன்று போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை ஏழுகிணறு பகுதியில் சிறு சிறு அடிதடிகளில் ஈடுபட்டு போலீசாருடன் நெருக்கமானவராகி இருந்தார் காக்கா தோப்பு பாலாஜி. தற்போது சிறையில் இருக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கி இருக்கும் ரவுடி நாகேந்திரன் கோலோச்சிய காலத்தில் அவரது சிஷ்யனாக இணைந்து அடிதடி, கொலை, கொள்ளை, செம்மரக் கடத்தல் என அத்தனைகளிலும் இறங்கி 'தொழிலை' கச்சிதமாக கற்றுத் தேர்ந்தார். இந்த காக்கா தோப்பு பாலாஜியின் வலது, இடது கரங்களாக யுவராஜ், இன்பராஜ் இணைந்து கொள்ள இந்த மூவரணியின் ஆட்டம் அதிகமானது. ஒரு கட்டத்தில் யுவராஜையே பாலாஜி போட்டுத் தள்ள தனி ஆவர்த்தனம் உச்சத்தை எட்டியது..

இரட்டை கொலைகள்: சிறைக்கு போன பாலாஜி, தாதாக்களான மணல்மேடு சங்கர், குறநடராஜன் வகையறாக்களுடன் இணைந்தார். இந்த கூட்டணி சென்னையை கட்டுப்பாட்டில் கொண்டுவர அடுத்தடுத்து கொலைகளை அரங்கேற்றியது. இதில் மிக முக்கியமானது வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே குதித்து பில்லா சுரேஷை மனைவி கண் முன்னே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம்தான். பில்லா சுரேஷ் உயிரை குடித்த சிறிதுநேரத்திலேயே விஜியையும் வெட்டிப் போட்டார் பாலாஜி. இந்த இரட்டைக் கொலைகளால் காக்கா தோப்பு பாலாஜி, பயங்கர ரவுடியாக விஸ்வரூபமெடுத்தார். அப்புறம் என்ன செம்மரக் கடத்தலில் ஒரு தனி ராஜ்ஜியம்.. ஆள் கடத்தில் ஒரு தனி ராஜ்ஜியம் என பாலாஜியின் கொடியும் சில காலம் பறந்தது.
டிடிவி தினகரனுக்கு பிரசாரம்: 2017-ம் ஆண்டு சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது தமது ரவுடிப் பட்டாளங்களுடன் டிடிவி தினகரனுக்கு பிரசாரம் செய்தது அப்போது பேசு பொருளானது. ஆனால் அப்போதைய அதிமுக அரசோ, பாலாஜியையும் கோஷ்டிகளையும் கொத்தாக தூக்கி சிறையில் போட்டு வெளுத்தெடுத்தது.
சம்பவம் செந்திலுடன் மோதல்: 2020-ல் சிடி மணி என்ற மற்றொரு ரவுடியுடன் தேனாம்பேட்டை அருகே ரவுடி சம்பவம் செந்தில் என்ற சம்போ செந்தில் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சிக்க அன்று முதல் செந்திலுக்கும் பாலாஜிக்கும் பகை முற்றிக் கொண்டது.

என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை: இப்படி மொத்தம் 59 வழக்குகளில் தொடர்புடைய காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் தேடி வந்தனர். இன்னொரு பக்கம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் காகாதோப்பு பாலாஜிக்கான தொடர்பு குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்த பின்னணியில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே குடியிருப்பு ஒன்றில் காக்கா தோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாலாஜியை போலீசார் சுற்றி வளைத்த போது போலீசாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆடிய ஆட்டம் என்ன? என்பது அத்தனையும் காக்கா தோப்பு பாலாஜிக்கு கச்சிதமாகவே பொருந்தும்!
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications