'பெண்கள் விஷயம்'.. சென்னை அதிகாரியை வாழ்நாளில் மறக்க முடியாதபடி பழி வாங்கிய என்ஜினியர் கைது
சென்னை: சென்னையில் உள்ள தனியார் ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்றில் ஆனந்த் என்ற இன்ஜினியர் வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு அதிக வேலை பளு கொடுத்த உயர் அதிகாரியை பழிக்குப்பழி வாங்குவதற்காக அவரை பற்றி இணையதளத்தில் அவதூறாக பதிவிட்டாராம். பெண்களுடன் தொடர்புபடுத்தி உயர் அதிகாரி குறித்து அவதூறு தகவல்களை பரப்பியதாக இன்ஜினியர் ஆனந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார்,
சென்னையில் ஐடி நிறுவனங்களை தாண்டி ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. சென்னையின் புறநகர் பகுதிகளில் எண்ணவே முடியாத அளவிற்கு தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் இந்தியாவின் ஆட்டோ மொபைல் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மையத்தின் தலைநகரம் என்று சொல்லும் அளவிற்கும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் எண்ணூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், உரக்கடம், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி, திருவொற்றியூர் என எல்லா பக்கமும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.

அந்த வகையில் சென்னையில் ஒரு பிரபலமான ஆட்டோ மொபைல் நிறுவனம் ஒன்று இருக்கிறது. இங்கு இன்ஜினியராக 27 வயதாகும் ஆனந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மேல் அதிகாரியாக முத்துகிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். முத்துகிருஷ்ணன் பொறியாளர் ஆனந்துக்கு அதிக வேலை கொடுத்து தொல்லை கொடுத்தாராம். வேலை முடிந்த பிறகு ஆனந்தை வீட்டுக்கு அனுப்பாமல் தனது சொந்த வேலைகளுக்கும் முத்துகிருஷ்ணன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் முத்துகிருஷ்ணன் மீது ஆனந்த் கடும் அதிருப்தியில் இருந்தாராம்.
ஒருகட்டத்தில் முத்துகிருஷ்ணன் மீது கடும் கோபம் கொண்ட பொறியாளர் ஆனந்த், அவரை பழி வாங்குவதற்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. முத்துகிருஷ்ணனை பற்றி பெண்களுடன் தொடர்பு படுத்திய அவதூறு தகவல்களை இணையதளங்கள் வாயிலாக ஆனந்த் பரப்பினாராம். தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான பெண்கள் மீதான அத்துமீறல் ரீதியான அவதூறு தகவல்கள் பரப்பப்படுவதை கண்டறிந்து முத்துகிருஷ்ணன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபோன்ற அவதூறு தகவல்களை பரப்புபவர் யார் என்று முத்துகிருஷ்ணனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அவதூறு தகவல்களை பரப்புபவரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில் முத்துகிருஷ்ணன் பற்றி இணையதளங்களில் அவதூறு தகவல்களை பரப்பி வருபவர் ஆனந்த் என்பது கண்டறியப்பட்டது. அதன்பேரில் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். இதுபோல் அவதூறு தகவல்களை பரப்பினால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications