வாடகைத் தாய் சர்ச்சை.. நயன்தாராவுக்கு உதவிய பிரபல மருத்துவமனையில் சுகாதாரத் துறை நாளை விசாரணை
சென்னை: நயன்தாராவுக்கு உதவி செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ அதிகாரிகளிடம் நாளை விசாரணை நடத்தப்படுகிறது.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ள தகுதியில்லை அல்லது விருப்பம் இல்லை என்பதை உரிய முறையில் தெரிவித்து இருக்க வேண்டும்.
இந்த நடைமுறைகளுக்கு பொருத்தமான நபர் மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால் நடிகை நயன்தாரா விஷயத்தில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அமைச்சர் மா.சு. உத்தரவு
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக அவர் பதில் அளித்தார். இந்த நிலையில் நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு உதவி செய்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது.

இரட்டை குழந்தைகள்
நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப் பெரிய பிரபல தனியார் மருத்துவமனையில்தான் பிறந்துள்ளன. அந்த மருத்துவமனையில் உள்ள சில மருத்துவர்கள்தான் நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் விஷயத்தில் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

போலீஸார் விசாரணை
எனவே அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளார்கள். இந்த விசாரணையின் முடிவில் தனியார் மருத்துவமனையில் விதிகள் ஏதேனும் மீறப்பட்டிருப்பின் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு அந்த முறையின் சட்ட திட்டங்களை முழுமையாக கூற வேண்டியது மருத்துவர்களின் கடமை.

சென்னையின் பிரபல மருத்துவமனை
இது போல் நயன்- விக்கி தம்பதிக்கு பிரபல மருத்துவமனையின் மருத்துவர்கள் விதிமுறைகளையும் சட்டங்களையும் சொன்னார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் அந்த மருத்துவமனையின் டாக்டர்களிடம் நயன்தாரா எப்போது மருத்துவமனைக்கு வந்தார்? வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற எப்போது முன்பதிவு செய்தார், நயன்தாராவுக்கும் வாடகைத் தாய்க்கும் எந்த மாதிரியான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications