தொட்டு தொட்டு.. தொடக்கூடாத இடத்தில் தொட்ட "சபலிஸ்ட்".. அலறிய பெண்.. "கை" படும்.. அப்பறம் செம டுவிஸ்ட்
சென்னை: தொடக்கூடாத இடத்தில் இளம்பெண்ணை, அந்த சபலிஸ்ட் தொட்டு விட்டாராம்.. கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? ஏர்போர்ட்டே டென்ஷன் ஆகிவிட்டது.
அபுதாபியிலிருந்து தனியார் விமானம் ஒன்று சென்னை ஏர்போர்ட்டுக்கு வ்ந்து கொண்டிருந்தது.. அது ஒரு தனியார் பயணிகள் விமானம் ஆகும்.. விமானத்தில் மொத்தம் 156 பயணிகள் இருந்தனர்.

அலறல் சத்தம்: விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.. அப்போது, திடீரென ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.. அவருக்கு 30 வயது இருக்கலாம்.. அவர் கூச்சல் போடவும், அதிர்ந்து போன சக பயணிகள், அவரிடம் என்ன நடந்தது? என்று கேட்டார்கள்.
அப்போது அந்த பெண், தன்னுடைய பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவர் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக சொன்னார்.. அந்த பக்கத்து சீட்டுக்காரருக்கு 25 வயதிருக்கலாம்.. தன்னை தொடக்கூடாத இடங்களில், தொட்டு தொட்டு தொல்லை தருகிறார் என்று கோபத்துடன் புகார் சொன்னார்.. இதைக்கேட்டு அதிர்ந்த பயணிகள், அந்த இளைஞரை கண்டித்தனர்.. அதேபோல, விமானப் பணிப்பெண்களும், அந்த இளைஞரை திட்டினார்கள்..
கை பட்டுடுச்சு: அதற்கு அந்த இளைஞர், "நான் நல்லா தூங்கிட்டு இருந்தேன்.. தூக்கத்தில், ஒருவேளை தவறுதலாக கை பட்டிருக்கலாம் என்றார்.. ஆனால் அந்த பெண்ணோ உடனே மறுத்தார்.
இல்லை, அவர் பொய் சொல்கிறார். ஒருமுறை இல்லை.. ஃப்ளைட் ஏறினதில் இருந்தே, பலமுறை, தொடக்கூடாத இடங்களில் தொட்டு தொட்டு சீண்டினார்... அவரது கைகள் பலமுறை என்னை நோக்கி வந்தன.. நான் அவருடைய கைகளை ஒவ்வொருமுறையும் தட்டி விட்டேன். ஆனாலும் தொடர்ந்து அவர் அதைப்போலவே செய்தார் என்று புகார் கூறினார்.
களேபரம்: இந்த களேபரம் நடந்து கொண்டிருக்கும்போதே, விமான பணிப்பெண்கள், விமான கேப்டனுக்கு தகவல் சொல்லவும், உடனே விமான கேப்டன் சென்னை ஏர்போர்ட்டின் கன்ட்ரோல் ரூமுக்கு விஷயத்தை சொன்னார்.. மேலும், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில், பாதுகாப்பு அதிகாரிகளையும் தயார் நிலையில் இருக்கும்படி செய்தார்.
இவ்வளவும் செய்து முடிப்பதற்குள், சென்னை ஏர்போர்ட்டே வந்துவிட்டது.. விமானம் தரையிறங்கியதுமே, உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி, பெண் பயணிக்கு விமானத்துக்குள் தொல்லை கொடுத்த, இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர்... அதுமட்டுமல்ல, அவரை பாதுகாப்புடன் சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனைகளை முடித்த பிறகு, ஏர்போர்ட் ஆபீசிலேயே உட்கார வைத்துவிட்டனர்.

இது ஒரு குற்றமா: விசாரணை அதிகாரிகள் விசாரணையையும் துவங்கினர்.. அதற்கு அந்த இளைஞர், பக்கத்து சீட்டில் உட்காரும்போது, தெரியாமல் கைகள் படத்தான் செய்யும்.. இதெல்லாம் ஒரு விஷயமா? இது ஒரு குற்றமா? என்று அதிகாரிகளிடம் கூலாக கேள்வி எழுப்பினாராம்
இதற்கு பிறகு, விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரை சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.. சம்பந்தப்பட்ட பெண்ணும், அந்த இளைஞர் மீது புகார் கொடுப்பதற்காக ஸ்டேஷனுக்கு சென்றார்.. அதுவரை கெத்தாக பேசிக்கொண்டிருந்த இளைஞர், இந்த பெண் புகார் தர போகவும், அப்படியே பம்மிவிட்டார்.
உடனே போலீசாரிடம், "தெரியாமல் செய்துட்டேன் சார்.. என்னை மன்னிச்சிடுங்க" என்று சொல்லி கதறி அழுதுள்ளார்.. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்.. "நான் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்றேன் மேடம்.. இப்பதான் லீவு கிடைச்சது.. அதனால், சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன்.. நீங்க என் மீது புகார் தந்தால், என் வேலையே போய்விடும்" என்று தேம்பி தேம்பி அழுதாராம்.
கரிசனம்: இதைப்பார்த்ததும் அந்த பெண்ணுக்கு மனம் இளகிவிட்டது.. உடனே போலீசாரிடம், "நான் இவர் மீது புகார் கொடுக்க விரும்பவில்லை... எந்த பெண்ணும் இப்படி பாதிக்கப்படகூடாது, அதனால், வார்னிங் தந்து அனுப்பிவிடுங்கள் என்று சொல்லியதுடன், புகார் எதுவும் கொடுக்காமல் கிளம்பிவிட்டார்.. புகார் தராத காரணத்தினால், போலீசாரால், அந்த இளைஞர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை. ஆனால், வார்னிங் தந்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications