கேஸ் சிலிண்டர் கிடைக்காதா? சமையல் சிலிண்டர் தந்த ஷாக்.. குடோன்லேயே தண்ணி நிக்குதாமே.. மிரளும் சென்னை
சென்னை: 4வது நாட்களாக சென்னையின் பல இடங்களில் தண்ணீர் வடியாத நிலையில், கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும்கூட கேஸ் விநியோகம் பரவலாக செய்யப்படவில்லை.. பல சாலைகளில் தண்ணீர் வடியாமலேயே உள்ளதால், சிலிண்டர் விநியோகம் 4வது நாளாக தடைபட்டுள்ளது.

சென்னையில் அடித்த புயல் மழையால், தலைநகரமே தனித்தீவு போல ஆகிவிட்டது.. சாலைகள் எல்லாமே வெள்ளக்காடாக காட்சி தந்தன.. போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.. ரயில், பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.. அவசர தேவைக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
ரேஷன் கடைகள்: அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து அரசு, தனியார் அலுவலகங்கள், டாஸ்மாக், ரேஷன் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன.. இப்போதுகூட நிறைய கடைகள் திறக்கப்படவில்லை..
மழை நின்றுவிட்டாலும்கூட, இன்னும் மழைநீர் முழுவதுமாக வடியவில்லை.. மழைநீர் அதிகமாக தேங்கி நிற்கும் இடங்களில் கரண்ட் இன்னும் வரவில்லை.. நிறைய பகுதிகளில் மொபைல் சிக்னல் கிடைக்கவில்லை.. இதனால், அவசரத்துக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல், மீட்பு குழுவினரே திணறிப்போயுள்ளனர்.
மளிகை பொருட்கள்: பொதுமக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வந்தாலும், பெருமளவு கடைகள் மூடியே உள்ளன... பால், தண்ணீர் பாட்டில், மளிகை, காய்கறி கடைகள் போன்றவை இல்லாமல் தவித்துவருகிறார்கள்.. கோடம்பாக்கத்தில், ஒரு மெழுகுவர்த்தி 110 ரூபாய்க்கு விற்கிறார்களாம்.. அதனால், அந்த பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.. தண்ணீர் வடியாமல் வடசென்னை மக்கள், உச்சக்கட்ட ஆத்திரத்தில் இருக்கிறார்களாம்.
இதனிடையே, வீடுகளில் நிறைய பேருக்கு சிலிண்டர் விநியோகமும் செய்ய முடியவில்லை.. சில ஆம்புலன்ஸ்களே, மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் நடுரோட்டில் நீரில் சிக்கி நின்றுவிட்ட நிலையில், கேஸ் வாகனங்களும் இதே நிலைமைதான்.. பல சாலைகளுக்குள் நுழையவே முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது..
கேஸ் சிலிண்டர்: வழக்கமாக, சிலிண்டர் முன்பதிவு செய்ததில் இருந்து, அடுத்த 2 நாட்களுக்குள் வினியோகம் செய்யப்படும்.. ஆனால், சென்னை மற்றும் புறநகரில் செயல்படும் பல ஏஜன்சிகளின் குடோன்களில், மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது..
அதனால், குடோன்களில் வைக்கப்பட்டிருந்த, கேஸ் சிலிண்டர்களே நீரில் மிதக்கின்றதாம்.. இதனால் கடந்த 4 நாட்களாக, சிலிண்டர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சாலைகளில் மழைநீர் வடிந்தாலும், வீடுகளில் மழைநீர் வடிந்தாலும், கேஸ் குடோன்களிலும் நீர் வடிய வேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு தான் சென்னைவாசிகளுக்கு கேஸ் விநியோகம் செய்யப்படும் என தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications