பெருவெள்ளம்.. சென்னை மக்களே.. குடிநீர் வேண்டுமா? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க
சென்னை: பெருவெள்ளம் பாதித்த பகுதிகளில் குடிநீர் தேவைப்படுவோருக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. குடிநீர் பெற 1916 மற்றும் 044- 45674567 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத பேரிடரை சந்தித்து இருக்கிறது. லட்சக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. இங்குள்ள மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம், பள்ளிக்கரணை என பெரும்பாலான பகுதிகளில் தற்போது வரை வெள்ள நீர் வடியவில்லை. சாலைகள் சேதமடைந்ததுடன், சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் பால் மற்றும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பல பகுதிகளில் குடிநீரும், பாலும், உணவும் இன்றி தவித்து வருகின்றனர்.
குடிநீர் தேவைப்படுவோருக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் பெற பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 மற்றும் 044- 45674567 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். தெருநடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொது பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications