Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தர்பூசணியில் அதிரடி! சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரி சதிஷ்குமார் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உணவு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சதிஷ் குமார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி போஸ், சென்னை மாவட்டத்தையும் கூடுதலாக கவனிப்பார் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chennai food safety sathishkumar

அண்மைக்காலமாக தர்பூசணி பழத்தில் ரசாயனம் கலந்து இனிப்பு சுவையையும் நிறத்தையும் கூட்டுவதாக புகார்கள் வந்த நிலையில் சதிஷ்குமார் ரெய்டு நடத்தியிருந்தார். கோடை காலத்தில் வெப்பத்தை தணித்துக் கொள்ள நீர்சத்தை தக்க வைத்துக் கொள்ள இந்த தர்பூசணி பழங்களை மக்கள் விரும்பி சாப்பிடுவர்.

பழத்தில் கலப்படமா

ஆனால் அந்த பழத்திலும் கலப்படமா என மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்தான் சதிஷ்குமார் தர்பூசணி பழம் குறித்து விளக்கமளிக்க சென்னை சைதாப்பேட்டையில் பேட்டி அளித்திருந்தார். அதில் தர்பூசணி பழ விவகாரத்தில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் குழப்பம் அடைய வேண்டாம்.

தர்பூசணி பழம்

தமிழகத்தில் விளையும் தர்பூசணி பழங்களை பாதுகாப்பு பகுதிக்குள் நாங்கள் வைத்திருக்கிறோம். தர்பூசணி பழத்தில் விவசாயிகள் கலப்படம் செய்வதில்லை. ஆனால் சில இடங்களில் நடக்கும் தவறுகளையும் நாங்கள் சுட்டிக் காட்ட தவறியதும் இல்லை.

ஆய்வில் ரசாயனம் இல்லை

சென்னையில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தர்பூசணி பழத்தில் கலப்படம் எங்குமே கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் கெட்டுப் போன, அழுகிய , எலி கடித்த தர்பூசணி பழங்களை மட்டுமே நாங்கள் பறிமுதல் செய்தோம். தர்பூசணி பழத்தில் செயற்கை நிறமி சேர்த்ததாக நான் யார் மீதும் வழக்கு போடவே இல்லை.

விவசாயிகள் தவறு செய்யவில்லை

விவசாயிகள் யாரும் தவறு செய்வதில்லை. தர்பூசணி பழத்தை தாராளமாக சாப்பிடலாம். ஆனால் நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்ற பிம்பத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். இது தவறு! ஆனால் தர்பூசணியில் கலப்படமும் இருக்கிறது.

அடர் சிவப்பு

மிகவும் அடர் சிவப்பாக இருந்தாலோ சாப்பிடும் போது சர்க்கரை போன்று தித்திப்பாக இனித்தாலோ உதட்டில் நிறம் ஒட்டினாலோ கண்டிப்பாக கலப்படம் செய்யப்பட்டது. அது இயற்கையான பழம் கிடையாது. இந்த விவகாரத்தில் நாங்கள் கார்ப்பரேட் குளிர்பான நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுவது தவறு.

தர்பூசணியில் கலப்படம்

தர்பூசணியில் கலப்படம் செய்தால் எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காகவே உணவு பாதுகாப்புத் துறை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இவ்வாறு உணவு பாதுகாப்பு அதிகாரி சதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

ஹோட்டல்களில் ஆய்வு

அது போல் ஹோட்டல்களில் கூட ஆய்வு மேற்கொண்ட சதிஷ்குமார், அங்கு கெட்டு போன உணவுகள் இருந்தால், "இதை நீ சாப்பிடுவியாப்பா, உன் குழந்தைக்கு கொடுப்பியா" என அதிரடியாக கேள்வி எழுப்பி, அபராதம் விதித்து, தவறுக்கேற்ப அந்த கடைக்கு சீல் வைக்கவும் தயங்கியதில்லை.

கெட்டு போன மீன்

அது போல் கெட்டு போன மீனை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்தும் சில சேனல்களில் அவர் விளக்கம் அளித்திருந்தார். அதாவது மீனை நடுவிரலில் பிடித்து பார்க்கும் போது இரு புறமும் கீழே சாய கூடாது, மீனின் நடுபகுதியை அழுத்தினால், பள்ளமாகிவிட்டு, மீண்டும் பவுன்ஸ் பேக் ஆகிவிட வேண்டும்.

Chennai food safety sathishkumar

ஃபிரஷ் மீன்

பள்ளமாகவே இருந்தால் அது அழுகும் நிலையில் இருப்பதாக அர்த்தம். அது போல் மீனின் செதில்களை தொட்டு பார்க்க வேண்டும். அதில் ரத்தம் இருக்கிறதா, இல்லை ஏதாவது சாயம் கலந்து ஃபிரஷ் என காட்டுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். அது கண்கள் கலங்கி இருந்தாலும் அவை கெட்டு போனவை என விளக்கியிருந்தார்.

உணவில் கலப்படம்

மேலும் எந்த ஹோட்டலிலாவது உணவில் கலப்படம் , கெட்டு போன உணவு என போன் செய்தாலே போதும் அங்கு வந்து ஆய்வு மேற்கொள்ளவும் தவறியதில்லை. இந்த நிலையில் தற்போது சதிஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+