சென்னை பார்முலா 4 பந்தயம் தடை கோரிய வழக்கு.. நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள்.. தீர்ப்பு எப்போது!
சென்னை: தலைநகர் சென்னையில் நடக்கவுள்ள பார்முலா 4 கார் ரேஸ் நடத்தத் தடை கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பைச் சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
சென்னையில் டிசம்பர் 9, 10 தேதிகளில் தீவுத் திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்க இருந்தது. தெற்காசியாவில் முதல்முறையாக இரவு நேர போட்டியாகவும் இது இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதில் டிக்கெட் விற்பனை தொடங்கி நடந்து வந்த நிலையில், போட்டிக்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் நடந்து வந்தது. இருப்பினும், சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக இந்தப் போட்டிகள் இப்போது மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பார்முலா 4: இதற்கிடையே இந்த பார்முலா 4 கார் ரேஸ் போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாலுச்சாமி, ஸ்ரீ ஹரீஷ், மதுரை வீரன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர், பன்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடக்க இருப்பதாகவும், 250 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால் சிகிச்சை பெறுபவர்களைப் பாதிக்கும் என மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டது.
மேலும், ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியை கார் பந்தயத்திற்குப் பயன்படுத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
மனுதாரர்கள்: அப்போது மனுதாரர்கள் தரப்பில், "கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயைச் செலவு செய்வது தவறு.. மேலும், சட்ட அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும் இல்லை. இந்த போட்டியை நடத்தும் தனியார் நிறுவனம் முதலீடு செய்யும் 200 கோடி ரூபாய் என்பது விளம்பரம், அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்டவைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் இந்த போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும்.. பந்தயம் நடத்துவது தொடர்பாகத் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விதி எந்த அனுமதியும் வழங்கவில்லை" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதைக் கேட்ட நீதிபதிகள், பந்தயம் நடத்துவதன் மூலம் எவ்வளவு வருவாய் திரட்டப்படுகிறது? யார் பயனடைகின்றனர்? என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு: இதற்குப் பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், "கார் பந்தயம் நடத்துவது என்பது அரசு எடுத்துள்ள கொள்கை முடிவு.. இதை நீதிமன்றம் ஆராய முடியாது. அரசு குறைவாகவே செலவிடுகிறது. டிக்கெட் விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. டென்னிஸ் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் அரசு தான் ஏற்பாடு செய்கிறது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "பந்தயம் நடத்தும் நிறுவனம் தரப்பில், கார் பந்தயம் நடத்தத் தங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் எந்த பொதுநலனும் இல்லை.. ஹைதராபாத்தில் கார் பந்தயம் நடத்தியதன் மூலம் அரசுக்கு 630 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை, நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications