சென்னை கோட்டை திமுகவுக்கு.. மற்றவர்களுக்கு மனக் கோட்டை தான்! ஆரூடங்களுக்கு ஆசிரியர் கி.வீ நச் பதில்!
சென்னை: மே 4ஆம் தேதி மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் எனவும், "சென்னை கோட்டை திமுக கூட்டணிக்கு, மற்றவர்களுக்கு மனக்கோட்டை தான் என்று திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி தியாகராயரின் 175ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்," தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்று திராவிடர் இயக்கத்தை உருவாக்கியவர் சர்பிடி தியாகராயர் என்றும் வரலாற்று பெருமைமிக்க ஒரு வாழ்வை அமைத்தவர். உலகம் போற்றும் அளவிற்கு திராவிட மாடல் ஆட்சி வந்துள்ளது.
அதற்கு அடித்தளம் இட்டவர் சர் பி டி தியாகராயர்.. இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு அற்புதமான ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் நடத்தி வருவதாகவும் தமிழ்நாடு யாருக்கும் அடிமையாக்க கூடாது ஒன்று என்றும் மிகப்பெரிய எழுச்சியை இன்று பார்க்கிறேன்.
1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 184 என்ற அளவில் திமுக தொகுதியை வென்றது., அப்போது ஆருடம் கூறியவர்கள் துண்டைக் காணும் துணியை காணும் என்று ஓடிவிட்டனர். மே 4ஆம் தேதி மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என நம்பிக்கை உள்ளது. சென்னை கோட்டை திமுக கூட்டணிக்கு, மற்றவர்களுக்கு மனக்கோட்டை தான்" என்றார்.














Click it and Unblock the Notifications