சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. சிறிது ரெஸ்ட்டுக்கு பிறகு மீண்டும் மழை
Recommended Video
சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த மழை இன்று விடிய விடிய கொட்டித் தீர்த்தது. தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குமரி கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளது.
இதனால் தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. லட்சத்தீவு உள்ளிட்ட கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த காற்றழுத்தம் அரபிக் கடலில் கியார் புயல் பயணிக்கும் பாதையில் பயணிக்கிறது.

இது மெல்ல நகர்ந்து லட்சத்தீவுகளுக்கு சென்று அங்கு குறைந்த காற்றழுத்தமாகவோ அல்லது புயலாகவோ மாறும். இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.
இதனால் சாலைகளிலும் தாழ்வான இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. காலை லேசாக விட்டிருந்த மழை தற்போது மீண்டும் தொடங்கிவிட்டது. போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், முகப்பேர், அண்ணா நகர், அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வருகிறது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அலுவலகம் செல்வோர் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications