அய்யோ இங்கே வந்து பாருங்களேன்.. கதறிய மணமகள்.. முதலிரவு அறையில் மணமகன் விபரீத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை திருமுல்லைவாயலில் முதலிரவு அறையில் அய்யோ இங்கே வந்து பாருங்களேன் என மணமகள் கதறி அழுதிருக்கிறார். ஓடி வந்து பார்த்தபோது மணமகன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் கல்யாண வீட்டைசோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் தாலுகா, குள்ளப்பான் தண்டலம் போஸ்ட் நெல்வாய் கிராமத்தில் வசிப்பவர் சரஸ்வதி. இவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்,

அந்த புகார் மனுவில் என்னுடைய தம்பியான கார்த்திகேயனுக்கு எங்கள் அத்தை வசந்தியின் மகளாகிய நந்தினியுடன் 8-ம் தேதி திருமணம் நுகும்பல் கிராமத்தில் நடந்தது. திருமுல்லைவாயலில் உள்ள பெண் வீட்டில் அன்றைய தினம் இரவு 11.30 மணியளவில் முதலிரவுக்காக மணமகனையும் மணமகளையும் அறைக்குள் அனுப்பி விட்டு பக்கத்து அறையில் நாங்கள் தூங்கினோம்.

கதறிய மணமகள்

கதறிய மணமகள்

9- ம் தேதி காலை 6 மணியளவில் மணமகள் நந்தினி கதவை தட்டினார். அய்யோ இங்கே வந்து பாருங்களேன் என்று அவள் அலறினாள். உடனே நாங்கள் பூட்டிய அறையை திறந்து பார்த்தபோது மணமகன் காத்திகேயனை முதலிரவு அறையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த நாங்கள் கார்த்திகேயன் உடலை படுக்கையில் இறக்கினோம்.

நந்தினியிடம் கேட்டோம்

நந்தினியிடம் கேட்டோம்

உடனே நந்தியினிடம் இரவில் ஏதாவது பிரச்னையா என்று கேட்டேன். அதற்கு அவள் பிரச்னை எதுவும் இல்லை. கார்த்திகேயன் பதற்றத்தில் இருந்தார். எனவே நான் பரவாயில்லை என சமாதானம் செய்தேன். பிறகு நான் தூங்கி விட்டேன். காலையில் கண்விழித்து பார்த்தபோது கார்த்திகேயன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் என்று கூறினார்.

வழக்கு பதிவு

வழக்கு பதிவு

எனவே என் தம்பி கார்த்திகேயனின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பிறகு என்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் திருமுல்லைவாயில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் முத்துகுமார், இந்திய தண்டனைச் சட்டம், 174 என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

அத்தை மகள்

அத்தை மகள்

இதுகுறித்து திருமுல்லைவாயில் போலீஸார் கூறும் போது "மணமகனின் சகோதரி சரஸ்வதி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளோம். மணமகன் கார்த்திகேயனின் அத்தை மகள்தான் நந்தினி. பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் திருமணம் நடந்துள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

முதலிரவு அறையில் என்ன நடந்தது என்று மணமகள் நந்தினியிடம் விசாரித்தபோது கார்த்திகேயன் பதற்றத்தில் இருந்திருக்கிறார். பாத்ரூம் சென்று விட்டு வந்துள்ளார். அப்போது கார்த்திகேயனிடம் பிரச்னை எதுவும் இல்லை, என நந்தினி ஆறுதல் கூறியிருக்கிறார். மணமகள் நந்தினியும் அவரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருப்பதால் இறுதி சடங்கு முடிந்தபிறகு இரு தரப்பு குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். சென்னை திருமுல்லைவாயலில் முதலிரவு அறையில் மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+