சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நித்தி- ரஞ்சிதா வீடியோ விவகாரம்.. மறுவிசாரணை வழக்கை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

Google Oneindia Tamil News

சென்னை: நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ காட்சி வெளியான விவகாரம் தொடர்பாக வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரி நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

பிடதி ஆசிரம தலைவர் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோவை தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

நவீன தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சியை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக, நித்யானந்தா தியான பீட நிர்வாகி சென்னை காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

என்ன பண்ணிட்டு இருந்தீங்க..சீமை கருவேல மரங்கள் மண்ணை மலடாக்கும்.. அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம்என்ன பண்ணிட்டு இருந்தீங்க..சீமை கருவேல மரங்கள் மண்ணை மலடாக்கும்.. அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம்

சிபிசிஐடி வழக்குப் பதிவு

சிபிசிஐடி வழக்குப் பதிவு

இந்த புகாரின் அடிப்படையில் லெனின், ஐயப்பன், ஆர்த்தி ராவ் உள்பட பலர் மீது சி.பி.சி.ஐ.டி. பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை மறு விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும், ஆர்த்திராவ், பரத்வாஜ் இடையே நடந்த இ-மெயில் உரையாடலையும், கர்நாடக மாநில அமர்வு நீதிமன்றத்தில் உள்ள மார்பிங் வீடியோ கேசட் குறித்தும் மீண்டும் விசாரிக்க கோரியும் நடிகை ரஞ்சிதா மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

ரஞ்சிதா

ரஞ்சிதா

இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சிதா தரப்பில் இந்த வழக்கை நேரடி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நேரடி விசாரணைக்கு அனுமதித்து, வழகை விசாரணையை பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

கடந்த 2010-ஆம் ஆண்டு இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிடதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நித்தியானந்தா , அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என மறுத்தார். அது போல் நடிகை ரஞ்சிதாவும் இந்த வீடியோ திட்டமிட்டு போலியாக மார்பிங் செய்யப்பட்டது என தெரிவித்திருந்தார்.

உண்மைத்தன்மை

உண்மைத்தன்மை

இதையடுத்து இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய கர்நாடகா போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வீடியோவில் இருக்கும் குரலை பெங்களூர் சோதனை மையம் ஆய்வு செய்ததில் அது அவருக்கு சொந்தமானதுதான் என கூறியது. அது போல் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவும் உண்மைதான் என டெல்லி தடயவியல் ஆய்வு மையம் அறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai HC adjourns the re hearing plea submitted by Actress Ranjitha in Nithyananda video issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X