கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு! எடப்பாடி பழனிசாமியின் மானநஷ்ட வழக்கில் ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனபாலுக்கு எதிராக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மான நஷ்டஈடு வழக்கு, வழக்கறிஞர்கள் வாதத்துக்காக செப்டம்பர் 27ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியிருந்தார்.
இந்த வழக்கில், சாட்சியம் அளிக்க மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது எனவும், சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவுசெய்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், வழக்கறிஞர்கள் வாதத்துக்காக விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications