சென்னை பழைய சட்டக் கல்லூரி அருகே புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா.. ஹைகோர்ட் அனுமதி
சென்னை: சென்னை பழைய சட்டக் கல்லூரி அருகில் ஐந்து மாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நாளை நடத்த அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பாரிமுனையில் உள்ள பழைய சட்டக் கல்லூரி வளாகத்தில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்டவை அடங்கிய ஐந்து மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன், வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன்,
புராதன கட்டிடமான இங்கு மாஸ்டர் பிளான் ஏதுமில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது எனவும், உயர்நீதிமன்ற வளாகத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து மாஸ்டர் பிளான் வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும், மாஸ்டர் பிளான் வகுக்கும் வரை, ஐந்து மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பழைய சட்டக் கல்லூரியை இடிக்கப் போவதில்லை என்றும், அதன் அருகில் தான் ஐந்து மாடி கட்டிடம் அமையப் போகிறது என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், அடிக்கல் நாட்டுவதற்கு எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என்றும், அனுமதி பெறாமல் ஒரு செங்கலை கூட கட்ட முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், ஐந்து மாடி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் மோகன் அளித்த விண்ணப்பத்தை சென்னை உயர் நீதிமன்ற கட்டிடக் குழு நேற்று மாலை ஆய்வு செய்தது. அந்த கூட்டத்தில், புதிய நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய குழுவின் அறிக்கை அடிப்படையில் முடிவெடுத்த பிறகே கட்டுமானப் பணிகள் துவங்கப்படும். அதற்கு முன் எந்த கட்டுமான பணிகளும் துவங்கப்படாது என உறுதி தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக பிரிவு பதிவாளர் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மத்திய, மாநில அரசுகள் தவிர, வேறு எவரும் கட்டுமானங்கள் மேற்கொள்வதாக இருந்தால் தான் முன் அனுமதிகள் தேவை என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்ற கட்டிடக் குழுவின் கூட்ட முடிவுகளை பதிவு செய்து, நாளை அடிக்கல் நாட்டு விழா நடத்தலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
சட்டக் கல்லூரி வளாகத்தில் இருந்த இரு சமாதிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், அடிக்கல் நாட்டு விழாவை இந்து மத முறைப்படி மட்டுமல்லாமல், அனைத்து மத முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும் என, திராவிடர் கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முரளி சேகர் முறையீடு செய்தார்.
இது ஒரு மத நிகழ்வு என எப்படி அனுமானிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என நிராகரித்தனர்.
-
தமிழகத்தில் அதிமுக கூட்டணி 114, திமுக 104..? IANS - Matrize வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்! -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம் -
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும்.. தேர்தல் தேதிக்கும் இவ்வளவு கேப் ஏன்? கிளம்பும் சந்தேகம்! -
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி? -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு! -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட் -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது











Click it and Unblock the Notifications