கோர்ட்டை விட விஷால் என்ன பெரிய ஆளா? நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் என்ன? நீதிபதி கோபம்
சென்னை: நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாத நடிகர் விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்றத்தை விட தான் பெரியவன் என நினைக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு,செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்த நிலையில், அவரது நான்கு வங்கிக் கணக்குகளின் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன, சொத்து ஆவணங்களுடன் செப்டம்பர் 19ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஆஜராக விலக்கு அளிக்கபட்டு இருந்தது.
அன்றைய தினம் இந்த வழக்கு நீதிபதி P.T.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாததால், நடிகர் விஷால் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
அதன்படி இன்று விஷால் ஆஜரான நிலையில், நீதிமன்ற உத்தரவிட்டபடி ஆவணங்களை தாக்கல் செய்யாததால், விஷால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை ஏன் எடுக்க கூடாது என் நீதிபதி கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தை விட பெரிய ஆள் என எண்ண வேண்டாம் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தில் அனைவரும் எப்படி கருதப்படுகின்றனரோ, அவ்வாறுதான் நீங்களும் கருதப்படுவீர்கள் என விஷால் தரப்பிடம் அறிவுறுத்தினார்.
விஷால் தரப்பில் வங்கியிலிருந்து ஆவணங்களை பெற தாமதம் ஆகிவிட்டது என்றும், அதனால் நீதிமன்றம் கேட்ட ஆவணங்கள் நேற்று ஆன்லைன் வாயிலாக தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நேற்று ஆன்லைனில் தாக்கல் செய்தது உறுதியாகாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.
விஷால் தரப்பில் 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனக்கு சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. 75 வயதான தந்தையின் கிரானைட் தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமான அவரது வீட்டுக் கடனையும் விஷால் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான விவரங்களை தாக்கல் செய்ய 6 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது.
மேலும் அடுத்த 28 நாட்களுக்கு படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள இருப்பதால், அடுத்த விசாரணையின்போது ஆஜராக விலக்கு அளிக்கவும் விசால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதி, வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களை பெறவும், நீதிமன்றம் கேட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்த விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கியும், விஷால் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications