ஐஸ்வர்யா ரஜினி வீட்டு நகை திருட்டு வழக்கில் பணிப்பெண் முக்கிய வழக்கு.. சென்னை ஹைகோர்ட் புதிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருட்டு வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்கக் கோரி பணிப்பெண் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தன் வீட்டில் இருந்த 60 சவரன் தங்க நகைகள், வைர, நவ ரத்தின நகைகள் திருட்டுப் போனதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரியை கைது செய்தனர்.

Chennai HC asks reply from police on Aiswarya Rajinis maid Eswari plea

இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட ஈஸ்வரி, அவரது மகள்களான பொறியாளர் பிருந்தா, மளிகை கடை உரிமையாளர் மஞ்சுளா ஆகியோரின் வங்கி கணக்குகளை முடக்கி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மந்தவெளி கிளை மேலாளார் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்துள்ள வங்கி கணக்குகளை முடக்கியதால், வாழ்வாதாரம் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், எந்தவித வாய்ப்பும் வழங்காமல் வங்கி கணக்கை முடக்கியது இயற்கை நீதிக்கு முரணானது எனவும் கூறி, வங்கி கணக்கு முடக்கியதை எதிர்த்து கடந்த ஜூலை 13ம் தேதி வங்கியின் கிளை மேலாளருக்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், தன் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் தெரிவித்திருந்தார்.

Chennai HC asks reply from police on Aiswarya Rajinis maid Eswari plea

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ஒரு வாரத்தில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

பின்னணி என்ன: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வைரம், நவரத்தினம் உள்ளிட்ட நகைகளை லாக்கரில் வைத்துள்ளார். அந்த நகைகள் பாரம்பரியமானவை, அவற்றை 18 ஆண்டுகளாக ஐஸ்வர்யா சேகரித்து வைத்திருந்தார். அந்த நகைகள்தான் திருடு போனதாக ஐஸ்வர்யா புகார் அளித்திருந்தார்.

Chennai HC asks reply from police on Aiswarya Rajinis maid Eswari plea

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் நகைகள் இருந்தன. பின்னர் முன்னாள் கணவர் தனுஷுடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறிய போது அங்கும் லாக்கர் கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா கணவர் தனுஷை பிரிந்ததால் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு போயஸ் தோட்டத்தில் உள்ள தந்தை இல்லத்திற்கு வந்துவிட்டார்.

அங்கு வந்து பார்த்த போதுதான் 60 சவரன் நகைகளை காணவில்லை. லாக்கரின் சாவி வைக்கும் இடம் பணிப்பெண் ஈஸ்வரிக்கு தெரியும் என ஐஸ்வர்யா புகார் அளித்திருந்தார். இந்த நகைகளை ஈஸ்வரி சிறுக சிறுக திருடியுள்ளதாக தெரிகிறது. இப்படி நகைகளை திருடி அதை விற்று பணமாக்கி சோழிங்கநல்லூரில் வீடு வாங்கியுள்ளார் ஈஸ்வரி. அவருடைய மகளுக்கு திருமணம செய்து கொடுத்துள்ளார். மேலும் கணவருக்கும் மளிகைக் கடையும் மற்றொரு மகளுக்கு காய் கடையும் வைத்திருந்தார். அத்துடன் தனுஷ் வீட்டுக்கு தேவையான மளிகைச் சாமான்கள், காய்கறிகள் தான் வைத்துக் கொடுத்த கடைகளிலேயே வாங்கியுள்ளார் என விசாரணையில் வெளிவந்தது. இந்த நிலையில்தான் ஈஸ்வரியின் சொத்துகள் முடக்கப்பட்டதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+