ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தமிழக அரசு தடை விதித்ததில் என்ன தவறு.. சென்னை உயர்நீதிமன்றம் நறுக் கேள்வி
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தடை சட்டம் விதித்ததில் என்ன தவறு இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் விளையாட்டு நிறுவனங்களை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்டதை கண்டித்து 66 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு , கிராஃப்ட் நிறுவனம் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று அவசர வழக்காக விசாரிக்க கோரிய நிலையில் அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து இன்று விசாரிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் ஆன்லைன் தடை சட்டத்தை நீக்க கோரி விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த மனு மீது விசாரணை நடந்தது. அப்போது பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா கூறுகையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தடை சட்டம் விதித்ததில் என்ன தவறு இருக்கிறது.
சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்கள், குடும்ப வறுமை ஆகியவற்றை தடுக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் லாட்டரி, குதிரை பந்தயம் ஆகியவை நீண்ட நாளாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனது சொந்த ஊரான மதுரை மாவட்டம் தென்னூரில் மது, சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னூரை மாதிரி கிராமமாக மதுரை காந்தி அருங்காட்சியகம் தேர்வு செய்துள்ளது. தன் மக்கள காக்கவே சட்டம் இயற்றியுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. ரம்மியில் கணவர்கள் பணத்தை இழப்பதாக அவர்களின் மனைவிகள் கண்ணீர் வடிக்கிறார்களே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் லாட்டரி, மது, குதிரை பந்தயத்தை தடை செய்யவில்லை.
ஆனால் ஆன்லைன் ரம்மியை மட்டும் சமூக கேடாக பார்க்கிறார்கள். கிளப்புகளுக்கு சென்று சூதாடுவதை விட ஆன்லைன் ரம்மி பாதுகாப்பானது. ரம்மி, போக்கர் போன்ற திறமைக்கான விளையாட்டுகளை சூதாட்டமாக பார்ப்பது தன்னிச்சையானது என தங்கள் வாதத்தை முன் வைத்தன. இதையடுத்து தமிழக அரசு தன் வாதத்தில், விளையாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க குடும்பங்கள் சீரழிப்பதால் அந்த குடும்பங்களை பாதுகாக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு இணையவழி சூதாட்டத்தை தடை விதிக்க எந்த தகுதியும் இல்லை. தமிழக மக்களின நலன் காக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது என வாதம் செய்தனர். ஆன்லைன் தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு எந்த பாதுகாப்பும் அளிக்க கூடாது என்றும் தமிழக அரசு வாதத்தை முன் வைத்துள்ளது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications