முப்படைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை.. புகார் குழுக்களை உறுதி செய்ய ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ராணுவம், கடற்படை, விமானப் படைகளிலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் உள் புகார் குழுகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள விமானப்படை கல்லூரியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த பயிற்சி வகுப்புக்கு வந்த விமானப் படை பெண் அதிகாரியை, சக அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விமானப் படையின் ராணுவ நீதிமன்றம், விசாரணையை துவங்கியது. இந்த விசாரணையில் திருப்தியளிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விமானப் படைச் சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவரை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி, விமானப் படை கல்லூரி கமாண்டண்ட் தாக்கல் செய்த மனுவை ஏற்ற கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை ஒப்படைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, விமான படைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை எனவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையில்லை எனவும் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டு, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், விமானப் படை பெண் ஒருவர், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக போராட தைரியம் இல்லாவிட்டால், வேறு யாருக்கு இருக்கும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, ராணுவம், கடற்படை, விமானப் படைகளிலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் உள் புகார் குழுகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications