ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக் வீடியோவை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி.. குண்டாஸை ரத்து செய்ய மறுப்பு
சென்னை: ரவுடி பேபி சூர்யாவின் டிக்டாக் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் குண்டர் சட்டத்தை எதிர்த்து வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டனர்
ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.
இதனால் பல சிக்கல்களையும் ரவுடி பேபி சூர்யா சந்தித்தார். இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக தகாத முறையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

ரவுடி பேபி சூர்யா
இந்த புகாரின் பேரில், போலீஸார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்தனர். பின்னர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்கந்தர்ஷா என்ற சிக்காவையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது .காழ்ப்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும், தனது கோரிக்கையை அறிவுரைக் கழகம் உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

விசாரணை
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி என் பிரகாஷ் மற்றும் நீதிபதி டீக்காரமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ், இந்த வழக்கை சீராய்ந்து பார்க்கும்போது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியுள்ளதாகவும், அவர் பேசிய வீடியோக்களை நீதிபதிகள் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

டிக்டாக் வீடியோ பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி
லேப்டாப் மூலம் நீதிபதிகளிடம் டிக் டாக் காட்சிகளை காண்பித்தார். ஒரு சில காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் ,வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து வழக்கை ஆறு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர். டிக்டாக் எனும் செயலியில் நிறைய இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்கள். இதன் மூலம் நிறைய சம்பாதிக்கவும் செய்தார்கள்.

வருமானம்
இதில் வந்த வருமானத்தை வைத்து பலர் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு இந்த டிக்டாக்கிலேயே மூழ்கினார்கள். அந்த வகையில் டிக்டாக்கில் பிரபலமடைந்தவர்கள் நிறைய பேர் இருந்தாலும் ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, இலக்கியா, திவ்யா கள்ளச்சி உள்ளிட்டோர்தான். இதில் ரவுடி பேபி சூர்யா தனது வீடியோக்களில் அதிக கவர்ச்சி காட்டியதுடன் அவரை எதிர்த்து யார் பேசினாலும் அவர்களை மிகவும் ஆபாசமாக பேசி வந்தார்.

கொரோனா காலம்
கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் செல்போனில் ஆன்லைனில் பாடம் படித்த போது இது போன்ற இவர்களது ஆபாச வீடியோக்கள் வந்தன. இது தொடர்பாக யாராவது சிக்காவுக்கோ இல்லாவிட்டால் ரவுடி பேபி சூர்யாவுக்கோ போன் செய்தால் போதும் அவ்வளவுதான் அடுத்த வீடியோ ஆபாச அர்ச்சனை ரெடியாக இருக்கும். இப்படி ஒருவர் போன் செய்த போது அவருடைய எண்ணை விபச்சாரம் செய்பவர் எண் என சிக்காவும் ரவுடி பேபி சூர்யாவும் கொடுத்துவிட்டதாகவும் அதன் பேரில் நிறைய பேர் அந்த பெண்ணிற்கு போன் செய்து ஆபாசமாக பேசியதால் மனஉளைச்சல் அடைந்ததாகவும் டிஜிபி வரை புகார் சென்றுள்ளது.

மிரட்டல்
இப்படியாக வரிசையாக பத்திரிகையாளர்களை மிரட்டுவது, போலீஸை ஒரு பொருட்டாக மதிக்காமல் வீடியோக்களில் கெத்து காட்டி பேசுவதுமாக இருந்த ரவுடி பேபி சூர்யாவும் சிக்கந்தரும் கைது செய்யப்பட்டு இருவர் மீது கடந்த பிப்ரவரி மாதம் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications