சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"செந்தில்குமாரை" வச்சி செய்ய போகும் ஆரணி போலீஸ்.. ஸ்டாலினை மோசமாக பேசி.. கறார் காட்டிய ஹைகோர்ட்

முதல்வரை அவதூறாக பேசிய நபரின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினை ஃபேஸ்புக்கில் விமர்சித்தவரின் முன்ஜாமீன் மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.. ஆரணி போலீசின் கடும் ஆட்சேபத்தை அடுத்து செந்தில்குமார் என்பவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ளது வேலப்பாடி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் செந்தில்குமார்.. இவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

இந்த சர்ச்சை கருத்துக்கள் வைரலானதையடுத்து, ஆரணி தாலூகா போலீசில் ரவி என்பவர் கடந்த மாதம் புகார் அளித்திருந்தார்.

ஆற்றில் துணி துவைத்த தெய்வானை.. அருகில் சென்ற முத்துசாமி.. ஜஸ்ட் 50 ரூபாய்க்காக.. ஹைகோர்ட் அதிரடிஆற்றில் துணி துவைத்த தெய்வானை.. அருகில் சென்ற முத்துசாமி.. ஜஸ்ட் 50 ரூபாய்க்காக.. ஹைகோர்ட் அதிரடி

புகார்கள்

புகார்கள்

அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்திருந்தனர்.. அதில், இதையடுத்து, முன் ஜாமீன் கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. ஆனால், அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது... இதையடுத்து முன் ஜாமீன் கோரி, மீண்டும் ஹைகோர்ட்டில் செந்தில்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சிவஞானம்

சிவஞானம்

தான் அப்படிப்பட்ட செயல்களில் எல்லாம் ஈடுபடவில்லை என்றும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே, அப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அந்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்... எனவே, தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவானது, இன்று நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

முன்ஜாமீன்

முன்ஜாமீன்

அப்போது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி தமிழக முதலமைச்சரை தரந்தாழ்ந்தும், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளாலும் விமர்சித்துள்ளதாலும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாலும் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார். இதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கபட்டதை ஏற்று நீதிபதி, முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து செந்தில்குமாரை கைது செய்யும் நடவடிக்கையில் ஆரணி தாலுகா காவல் நிலையத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்...

பெரம்பலூர்

பெரம்பலூர்

இதுபோலவே, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது, கட்சியின் மாநில துணைச்செயலாளர் சுப்பிரமணியன் என்பவர் முதல்வர் ஸ்டாலின் குறித்தும், அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதையடுத்து, சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். அதுபோலவே பெரம்பலூர் மாவட்டத்தில் அப்துல் வாஹிப் என்ற பொறியியல் பட்டதாரியும், முதல்வர் மற்றும் விசிகவினர் குறித்து தரம்தாழ்ந்து வீடியோ பதிவிட்டதால், வழக்கு பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
chennai hc dismissed the prebail petition of the person who spread slander about cm stalin முதல்வரை அவதூறாக பேசிய நபரின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X