புழல் சிறையில் விசாரணை கைதிகளை வழக்கறிஞர்கள் நேரடியாக சந்திக்க அனுமதிக்க வேண்டும்! ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: புழல் சிறையில் விசாரணை கைதிகளை வழக்கு தொடர்பாக நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்க கூடாது என சிறைதுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என வழக்கறிஞர் ஆனந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் சமீப காலமாக புழல் சிறை நிர்வாகம், விசாரணை கைதிகளை வழக்கறிஞர் நேரடியாக சிறையில் சந்தித்து வழக்கு தொடர்பாக பேசுவதற்கு அனுமதி மறுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சிறைக் கைதிகளை சந்திக்க ஆன் லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டால் வழக்கறிஞர்கள், சிறையில் உள்ள தொலைப்பேசி மூலம் மட்டுமே பேசிக் கொள்ள முடியும், ஒரு விசாரணை கைதி மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படும் என புழல் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்ததுள்ளதாக குறிபிட்டுள்ளார்.
மேலும் சிறைகளில் வழக்கறிஞர்கள் நேரடியாக விசாரணை கைதிகளை சந்திக்க அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காசிராஜன் ஆஜராகி, வழக்கு தொடர்பாக சிறைக் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, வழக்கறிஞர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என வாதம் வைத்தார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், புழல் சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்க எந்த தடையும் விதிக்க கூடாது என்றும் ஒரே நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே வழக்கறிஞர் பார்க்க வேண்டும் என்பதையும் மாற்றியமைக்க புழல் சிறை துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
கைதிகளை சந்திக்க செல்லும் வழக்கறிஞர்கள் அவர்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தனி அறை மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தமிழக டிஜிபி (சிறைத்துறைக்கு) உத்தரவிட்டதோடு இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 4- -ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications