காசு போட்டால்தான் பூ கிடைக்கும்! இல்லைன்னா விபூதி கூட கிடைக்காது! தீட்சிதர்கள் மீது நீதிபதி தாக்கு
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் காசு கொடுத்தால் பூ கிடைக்கும். இல்லாவிட்டால் விபூதி கூட கிடைக்காது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் தீட்சிதர்கள் ஆணவமாக நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர் கண்டித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கியாதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், பொது தீட்சிதர் குழுவின் முடிவில், தலையிட இந்து அறநிலைத்துறை அதிகாரம் இல்லை என்றும் இணை ஆணையரின் உத்தரவு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணை வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கோயில் தங்களுக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும் நீதிமன்றம் தான் இதனை கட்டுப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, தீட்சிதர்களால் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக சுட்டி காட்டிய நீதிபதி, மன கஷ்டங்களுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.
தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது என தெரிவித்த நீதிபதி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைப்பதாகவும் குறிப்பிட்டார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும், அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுவதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடத்துப்பட்டு வந்த ஆரூத்ரா தரிசனம் தற்போது பல கோவில்களில் நடத்தப்படுவதாகவும் சிதம்பரம் கோவில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை எனக்கூறினார்.
இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகி விடும் எனவும் கோவிலில் காசு போட்டால்தான் பூ கிடைக்கும் என்றும் இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம்பிடித்த விசிக நிர்வாகி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில், 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா, விசிக முகாம் செயலாளராக இருந்தார். இவர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது கோயிலுக்குள் தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
இதை இளையராஜா தனது போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதை பார்த்த தீட்சிதர்கள் அவரின் செல்போனை பறித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 5 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications