அவ்வளவுதான்.. அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் தீர்ப்பால் பெரும் சிக்கல்
சென்னை: அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவில் வைத்து ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இந்த பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதன் தீர்ப்பு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த 24 ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் நீதிமன்றத்தை நாடினார்.

அவசர வழக்கு
அவசர வழக்காக இந்த வழக்கு கடந்த 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்தல் நடத்திக் கொள்ளலாம். ஆனால் அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு வழக்கின் தீர்மானங்களை எதிர்த்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன் வைத்தார்.

பொதுச் செயலாளர்
அவர் கூறுகையில் பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெற முக்கிய பதவி வகித்த என்னை நீக்கியுள்ளார்கள். ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதிகள் இல்லை. இரட்டை பதவிகள் காலியானதாக எந்த நீதிமன்றமும் கூறவில்லை. எனவே பொதுக் குழுவில் எடுத்த தீர்மானங்கள் செல்லாது. ஜூலை 11 ஆம் தேதி நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடாமல் சிறப்பு தீர்மானம் போட்டு ஓபிஎஸ்ஸை நீக்கியுள்ளனர்.

சிறப்பு தீர்மானம்
சிறப்பு தீர்மானம் மீது பொதுக் குழுவில் எந்த விவாதமும் நடத்தவில்லை. பொதுக் குழுவில் தீர்மானமே கொண்டு வராமல் இரட்டை தலைமை காலாவதியானதாக எப்படி கூற முடியும்? அடிப்படை உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கும் விதியை பின்பற்றியே ஒருங்கிணைப்பாளர் நீக்கப்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை.

காலாவதியாகவில்லை
பொதுக் குழு உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர்கள்தான். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. திமுகவுடன் நெருக்கம் காட்டியதாக எளிதான ஒரு காரணத்தை கூறி என்னை நீக்கியுள்ளார்கள். என்னை நீக்கிய முறை எம்ஜிஆரின் கொள்ளைக்கு விரோதமானது என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது. அது போல் எடப்பாடி தரப்பு வாதங்கள், அதிமுக வாதங்களை கேட்ட நீதிபதி, தனது தரப்பு வாதங்களை ஓபிஎஸ் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யலாம் என கூறி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

அதிமுக பொதுக் குழு
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் வழக்கு, பொதுச் செயலாளர் தேர்வு வழக்கு உள்ளிட்டவற்றை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளித்தார். அதில் அதிமுக பொதுக் குழு செல்லும் என்றும் அதன் தீர்மானங்கள் செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க விதித்திருந்த தடையும் நீங்கியது.

அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லும்
அதிமுக தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியிலிருந்து நீக்கியதும் செல்லும் என்றாகிவிட்டது. தன்னை நீக்கியது சட்டவிரோதம் என பல வலுவான பாயிண்ட்களை வைத்து ஓபிஎஸ் தரப்பு வாதாடியும் இந்த வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராகவே வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஓபிஎஸ் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறார். அதன் மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. இதை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications