கல்வராயன் மலை பகுதி மக்களுக்கு பேருந்து வசதி! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதிகளை நான்கு வாரங்களில் செய்து கொடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வராயன் மலைப் பகுதி மக்களின் சமூக , பொருளாதார மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் , இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர்கள் காணொலியில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
அப்போது, சேலம் கோட்டம் சார்பில் கல்வ ராயன் மலைப் பகுதியில் தற்போது இரண்டு மினிப் பேருந்துகளும், விழுப்புரம் கோட்டம் சார்பில் 10 பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, விழுப்புரம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் போதுமான அளவில் இல்லை எனக்கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் லாபத்தை கருத்தில் கொள்ளாமல் கூடுதல் மினிப் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் அப்போது தான் அந்த பகுதி மக்கள், மாணவர்கள் பயனடைவர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், கல்வராயன் மலைப் பகுதிக்கு தேவையான பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications