வன்னியர் சங்க கட்டடம்.. 41,952 சதுர அடி நிலத்தை தமிழக அரசு மீட்கும் உத்தரவை ரத்து செய்த ஹைகோர்ட்
சென்னை: பரங்கிமலையில் வன்னியர் சங்க கட்டிடம் செயல்பட்டு வந்த 41,952 சதுர அடி நிலத்தை மீட்பது தொடர்பான உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை கிராமத்தில் உள்ள 41,952 சதுர அடி நிலம், தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் என்ற பெயரில் கட்டிடம் கட்டப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் அறிவிப்புகள் வெளியிட்டும், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறாததால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள, சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் மீட்ட அரசு, அங்கிருந்த வன்னியர் சங்க கட்டடத்துக்கு சீல் வைத்தது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அந்த கட்டிடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்; நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிட கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்க கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு கண்டோன்மெண்ட், தமிழக அரசு, காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம் ஆகியன உரிமை கோருவதால், நிலத்தை மீட்பது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.
ஏற்கனவே நிலம் கோவிலுக்கு சொந்தமானது என கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உரிய சட்டப்படி நிலத்தை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications