14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கு! இருவருக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்த ஹைகோர்ட்! என்னாச்சு?
சென்னை: குற்றம் சாட்டப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு நடத்தாமல், பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்னுக்குப் பின் முரணான சாட்சியத்தின் அடிப்படையில் தண்டனை விதிப்பது சரியாக இருக்காது எனக் கூறி, போக்சோ வழக்கில் இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர், தாராபுரம் சந்தைப்பேட்டை பகுதிக்கு 14 வயது சிறுமி, தனது ஆண் நண்பருடன் வந்துள்ளார். அங்கு வந்த சேதுபதி, காளிமுத்து ஆகிய இருவரும், ஆண் நண்பரை தாக்கி விட்டு, சிறுமியை தூக்கிச் சென்று அருகில் உள்ள சோளக்கொல்லையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சேதுபதி மற்றும் காளிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து 2019 ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து காளிமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, தங்கள் தீர்ப்பில் காலதாமதமாக புகார் அளித்ததும், முதல் தகவல் அறிக்கையை தாமதமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இரவு நேரத்தில் குற்றம் நடந்துள்ள நிலையில், அடையாள அணிவகுப்பு ஏதும் நடத்தாததும், பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்னுக்குப் பின் முரணான சாட்சியத்தின் அடிப்படையில் தண்டனை விதிப்பது சரியாக இருக்காது எனவும், காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் கூறி, ஆயுள் தண்டனையை ரத்து செய்து, இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications