எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே சட்டை கிழியும் அளவுக்கு மோதல்! அதிரடி காட்டிய ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்களிடையே மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகராறில் 20 பேர் மீது வழக்குகளை போலீஸார் பதிவு செய்திருந்தனர். நாற்காலிகளை தூக்கி வீசியும் ஒருவரை ஒருவர் தாக்கியும் இந்த தாக்குதலை நடத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றுள்ளது.

chennai highcourt advocates crime


அப்போது வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும் வழக்கறிஞர் விஜயகுமார், விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளித்ததின் பேரில் 20 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளக்கோரியும், நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த கோரியும் வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு முறையீடு செய்தார்.

முறையிட்டை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மோதல் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்கப்படும் என ஒப்புதல் அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+