கிருஷ்ணகிரி சிவராமனின் தந்தை மது போதையில் உயிரிழக்கவில்லை.. ஐகோர்ட்டில் தமிழக அரசு சொன்ன ஷாக் தகவல்!
சென்னை: போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சிவராமனும் உயிரிழந்துள்ளார், அவரின் தந்தையும் விபத்தில் உயிரிழந்துள்ளார். அப்படி இருக்கும்போது எப்படி விசாரணை சரியான முறையில் நடப்பதாக கருத முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது மாணவியை அதிகாலை 3 மணியளவில், தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை சிவராமனை கைது செய்தது. கைது செய்யப்படுவதற்கு முன்னதாக சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது சிவராமன் உயிரிழந்தார். அவரின் தந்தையும் அன்றே வாகன விபத்தில் உயரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், காவல்துறை நிலை அறிக்கையில் சரியான விசாரணை நடத்தவில்லை என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகளிக்கு கவுன்சிலிங் வழங்காமல், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடம் குடும்ப பின்புலங்களை காவல்துறை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? அரசு தரப்பில் சிவராமன் மட்டும் தான் காரணம் என வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார்.
இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாணவிகள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாரிடமும் தெரிவிக்க கூடாது என பள்ளி நிர்வாகம் மாணவிகளை மிரட்டியுள்ளது. ஆகஸ்ட் 17 அன்று கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் உடனடியாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. மாலை 3 மணியளவில் 7 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
சிவராமன் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததால், கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றார். கைதுக்கு பின் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிவராமன் மீண்டும் எலி விஷம் அருந்தியதால் உயிரிழந்தார். சிவராமனின் உயிரிழப்புக்கான மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம். சிவராமனின் தந்தை அதிகமாக மது அருந்தியதால் வாகனத்தில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். இரு சம்பவங்களிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
பள்ளி கல்வித்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதி இல்லாமல் முகாம்கள் நடத்த கூடாது என உடனடியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. எந்த பள்ளிகளில் முகாம்கள் நடத்தப்பட்டதோ? அந்த பள்ளிகளில் சிறப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உயரிழந்த சிவராமன் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், 1 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தவறான தொடுதல் என்பதும் கடுமையான தண்டனைக்கு உரியதே, அதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எந்த சமரசமும் இல்லை. சிறப்புப் குழுவின் விசாரணை அறிக்கை 1 வாரத்தில் கிடைத்துவிடும் என விளக்கம் அளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், எப்படி பள்ளி நிர்வாகத்தால் சிவராமன் என்.சி.சி முகாம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. யார் பொறுப்பு அதிகாரி? எந்த அதிகாரி அனுமதி வழங்கினார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சம்பவம் நடந்து ஏற்கனவே 10 நாட்கள் கடந்துவிட்டது. சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும், மாணவிகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். மாணவிகளின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது. முகாம் நடத்திய சிவராமன் உயிரிழந்துள்ளார். அவரின் தந்தையும் விபத்தில் உயிரிழந்துள்ளார். எப்படி விசாரணை சரியான முறையில் நடப்பதாக கருத முடியும். சிவராமனின் தந்தை தொடர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்றால், ஏன் சிவராமன் உயிரிழந்த அன்றே உயிரிழந்தார். அதற்கு முன்பே உயிரிழந்திருக்கலாமே?
சிவராமனின் தந்தை மரணம் குறித்து தனியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே நடந்தப்பட்ட போலி என்.சி.சி முகாம்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? என அரசு பதிலளிக்க உத்தரவிட்டு பிற்பகல் விசாரணையை தள்ளிவைத்தனர்.
இன்று பிற்பகல் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிவராமனின் தந்தை மது போதையில் உயிரிழக்கவில்லை. உடலில் சர்க்கரை குறைவுக்கு மருந்து வாங்க கடைக்கு சென்ற போது வானகன விபத்தில் உயரிழந்துள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் தரப்பில், பாதிக்கப்பட்டோர் இழப்பீடு மையத்தில் இருந்து இழப்பீடு வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. அந்த மனு பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, சிறப்பு குழு தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications