தமிழக அரசு தந்த முக்கிய விளக்கம்.. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவமதிப்பு வழக்குகளை முடித்துவைத்த ஹைகோர்ட்
சென்னை: ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பாக தமிழக காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் நியாயமற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் அதனை ஏற்று காவல்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஆகிய தினங்களில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் கூட தமிழக காவல்துறை சார்பில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து தமிழக காவல்துறை மற்றும் அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற வழிக்காட்டுதல் படி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு வரைவு வழிக்காட்டு நெறிமுறைகள் என்பது தாக்கல் செய்யப்பட்டது.
அதில் ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கு தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்தார். அப்போது அவர் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதில் நியாயமற்ற முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
மேலும் இதுபோன்ற அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும்போது பேனர்கள், பதாகைகள் எடுத்து செல்ல வேண்டும் என்றால் முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும் எனவும், ஊர்வலத்தின்போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் அந்த தொகையை திருப்பி பெற முடியாது எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications