சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

18+ மதன்.. ப்பா.. பூரா ஆபாசம், கேட்க முடியல.. மொதல்ல கேட்டுட்டு வந்து வாதாடுங்க.. ஹைகோர்ட் போட்டபோடு

யூடியூபர் மதன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை ஹைகோர்ட், அந்த பேச்சையெல்லாம் கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி முன்ஜாமீன் வழக்கில் ஆஜரான வக்கீலுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Recommended Video

    உட்கார்ந்த இடத்திலேயே லட்சங்களில் பணம்.. Madan OP-க்கு கிடைத்த மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

    2 நாட்களாக மதன்குமார் பேச்சுதான் சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்து கொண்டிருக்கிறது.. தடை செய்யப்பட்ட ஒரு சேனலை வைத்து கொண்டு, இஷ்டத்துக்கும் ஆட்டம் காட்டி வந்துள்ளார் இந்த மதன்.

    பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததால், அவரின் டாக்சிக் மதன் 18+ யூடியூபுக்கு பக்கத்துக்கு அதிக பார்வையாளர்களை அதிகமாக்கி, 7.8 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் சேர்ந்தனர்.

    பப்ஜி மதன் கூட சேர்ந்து.. பச்சை பச்சையாக பேசியது மனைவி கிருத்திகா.. 8 மாத கைக் குழந்தை வேறு.. கேவலம்பப்ஜி மதன் கூட சேர்ந்து.. பச்சை பச்சையாக பேசியது மனைவி கிருத்திகா.. 8 மாத கைக் குழந்தை வேறு.. கேவலம்

    சேனல்

    சேனல்

    "என்னுடைய சேனல், என்னுடைய பேச்சுரிமை" என்று ரூல்ஸ் பேசி கொண்டிருந்தார்.. சின்ன பிள்ளைகள் என்றுகூட பார்க்காமல் ஆபாசமாக, அருவெறுக்கத்தக்க வகையில் பேசி வந்தார். இப்படியே அசிங்கமாக பேசி பேசியே, மாசம் 7 லட்சம் ரூபாய் வரை தன்னுடைய ஆபாச யூடியூப் சேனல்கள் மூலம் காசு.. இவர் மூலதனமே அசிங்கமாக பேசுவது அல்லது மற்றவர்களை திட்டுவது. இதற்குதான் அத்தனை சப்ஸ்கிரைபர்கள் குவிந்துள்ளது ஆச்சரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

    போலீசார்

    போலீசார்

    சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தபோதுதான், மதன் பற்றின விஷயமே வெளியே தெரிய ஆரம்பித்தது.. ஒருகட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.

    நோட்டீஸ்

    நோட்டீஸ்

    அதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர்... இதற்கு பிறகுதான் பப்ஜி மதன் எஸ்கேப் ஆனார்.. இதனையடுத்து அவர் மீது சிறுவர்களை தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாக பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மதன்குமார்

    மதன்குமார்

    இந்நிலையில் முன் ஜாமீன் கோரி மதன் என்கிற மதன்குமார் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.-. அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மதன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என தெரிவித்தார்.

     முன்ஜாமீன்

    முன்ஜாமீன்

    காவல்துறை தரப்பில் ஆஜரான ஆபாச பேச்சுகள் மூலம் குழந்தைகளை கெடுக்கும் வகையிலும், பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் எனவும், மனைவி கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், தெரிவித்து, முன் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    ஆபாசம்

    ஆபாசம்

    அப்போது நீதிபதி தண்டபாணி, "யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்க கேட்டீங்களா" என்று மனுதாரர் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியதுடன், "ஆரம்பமே கேட்க முடியாத அளவுக்கு இருக்கு.. அந்த பதிவுகளை எல்லாம் கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடுங்கள்" என்று உத்தரவிட்டு வழக்கையும் தள்ளிவைத்தார்.என்னை யாராலும் பிடிக்க முடியாது, நித்யானந்தாவே ஹாயாக வெளியில் நடமாடி கொண்டிருக்கிறார் என்று டயலாக் பேசி கொண்டிருந்த மதன், அநேகமாக இன்று சரணடையலாம் என்று கூறப்படுகிறது.

    English summary
    Chennai High Court condemns Youtuber Madan's speech and adjourns his Bail Petition
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X