Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா மக்களே! கட்டாயம் ‘இதை’ மறக்காதீங்க! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல முடியும் என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்களை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடைக்காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

high court e pass


இப்படி கோடைக்காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விபரங்களான பயணிக்கும் வாகனங்களின் பதிவெண், அவர்கள் வரும் நாள், தங்கும் காலஅளவு, தங்கம் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் கோடை கொடைக்கானல், நீலகிரியை சுற்றிப்பார்க்கவும் வரும் சுற்றுலா பயணிகள் முறையான இ-பாஸ்க்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும்.

மேலும் இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் epass.tnega.org என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து இ-பாஸ் பெற்று கொள்ளலாம். வெளிநாட்டு பயணிகள் தங்களுடைய இ-மெயில் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டு பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல முடியும் என்பது குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்களை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் வருகை குறித்த புள்ளி விவரங்களை சேகரிப்பதற்காக ஊட்டி மற்றும் கொடைக்கானல் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ_பாசை கட்டாயமாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொளி காட்சி மூலம் ஆஜராகி இருந்தனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் வந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு சுற்றுலாப் பயணிகள் இவ்விரு இடங்களுக்கும் வருகை தந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டி காட்டினார்.

மேலும் இரு மாவட்ட ஆட்சியர்களும் அளித்த அறிக்கையில் கூறியுள்ள புள்ளி விவரங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் அது தவறான முடிவுக்கு வழி வகுத்து விடும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பதிலளித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தன்னிச்சையாக புகைப்படம் எடுக்கும் கேமராக்களை பொருத்த இருப்பதால் இனிமேல் முழுமையான புள்ளி விவரங்கள் கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இ பாஸ் இல்லாமல் எந்த வாகனமும் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்ல வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இபாஸ் பெற்ற பிறகு வாகனங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் இபாஸுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த விண்ணப்பத்தில் உரிமம் பெற்ற ரிசார்ட்கள் ஹோட்டல்கள் குறித்த விபரங்களை சேர்க்க முடியுமா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இ பாஸ் நடைமுறை சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்துவதற்கு அல்ல என தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+