உதயநிதி வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு.. அதிரடியாய் ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்ற உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டவர் உதயநிதி ஸ்டாலின்.
இந்தத் தேர்தலில் உதயநிதி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தல் வழக்கு
இருப்பினும், உதயநிதி வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதாவது தன் மீதான வழக்குகள் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளதாக வாக்காளர் பிரேமலதா என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதன் காரணமாக உதயநிதியின் வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

வழக்கு தள்ளுபடி
உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார். இந்தச் சூழலில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது. இதனிடையே இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உதயநிதியின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இப்போது இதை ஏற்றுச் சென்னை உயர் நீதிமன்றம் உதயநிதி வெற்றிக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

போதிய ஆதாரம் இல்லை
நீதிபதி பாரதிதாசனின் தீர்ப்பில், வழக்கில் மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

முந்தைய வழக்கு
முன்னதாக உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி என்பவரும் தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், கொஞ்ச காலத்திலேயே அந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்று ரவி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், அதை ஏற்க மறுத்து உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், அந்த தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications