அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை.. சென்னை ஐகோர்ட் அதிரடி!
சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியலூர் டால்மியா சிமெண்ட் சுண்ணாம்பு கல் சுரங்கத்தில் போராட்டம் நடத்தியதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ராமதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூரில் டால்மியா சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கம் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழக்கு பாதிப்பு ஏற்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் சுரங்கத்திற்குள் நுழைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதுதொடர்பாக டால்மியா நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜா ரஞ்சித் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது கயர்லாபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், அரியலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, போராட்டத்தில் எந்தவித வன்முறையும் நடைபெறவில்லை எனக் கூறி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவித்து உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications