ஸ்டாலின் பற்றிய பேச்சு! செல்லூர் ராஜூ மீதான அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை.. ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி
சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் பற்றி பேசிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் செல்லூர் ராஜு. முன்னாள் அமைச்சரான இவர் தற்போது மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு மே மாதம் மதுரையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை முனிச்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். அப்போது அவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது.
இதைடுத்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது அவதூறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிசாமி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த வழக்கில் செல்லூர் ராஜூவுக்கு நோட்டீஸ் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரியும் செல்லூர் ராஜூ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
செல்லூர் ராஜூ தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, ஆளுங்கட்சிக்கு எதிராக பேசியதற்காக அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதியபட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார். இந்த உத்தரவால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நிம்மதியடைந்துள்ளார்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications