செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்து.. பதிவுகளை நீக்க நிர்மல் குமாருக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜகவிலிருந்து அதிமுக-விற்கு மாறிய சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தவர் சிடி நிர்மல் குமார். இவர் பாஜகவின் மாநில ஐடி பிரிவு தலைவராக இருந்தார். இந்த வேளையில் அவர் ஆளும் திமுக மீதும், திமுக அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்தார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்த சிடி நிர்மல் குமார் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவுக்குள் அடியெடுத்து வைத்தார்.
முன்னதாக நிர்மல் குமார் பாஜக ஐடி விங்க் தலைவராக இருந்தபோது டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார். மேலும் இன்டர்வியூவும் கொடுத்திருந்தார்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தை நாடினார். நேர்காணல்களும் அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தம்மை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டப்படுவதாகவும், தன்னை பற்றிய அவதூறு கருத்துகளை நீக்கிவிட்டால், இந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர், முகாந்திரத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சிடி நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், நிர்மல்குமார் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளார்
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications