நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆஜராக சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிராம உதவியாளராக நியமிக்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் கிராம உதவியாளராக தன்னை நியமிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..

 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆஜராக சென்னை ஹைகோர்ட் உத்தரவு!

இதில் அவரை கிராம உதவியாளராக நியமிக்க தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிக்கு கடந்த 2007-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது..

ஆனால், இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமல்படுத்தாததால், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக துரைராஜ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்..

அதில், 2019-ம் ஆண்டு வரை பாலக்கோடு பகுதியில் கிராம உதவியாளர் பதவிக்கு யாரும் நியமிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்..

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், 4 வார காலத்திற்குள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+