கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம்.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தண்டனை கைதிகள், முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தனது மகன் ஹரிஹரனை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி அவரது தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Chennai high court says convicted prisoners have no legal or fundamental right to seek early release

அந்த மனுவில், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தண்டனை கைதிகள் 1,650 பேரை விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் தனது மகனை விடுவிக்க அரசு மறுத்து விட்டதாகக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஏ ஏ நக்கீரன் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இரண்டு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாலும், சிறையிலும் நன்னடத்தை விதிகளை ஹரிஹரன் கடைப்பிடிக்காததாலும் அவரை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என வாதிட்டார்.

இதையடுத்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மேலும், தண்டனை கைதிகள், முன்கூட்டியே விடுதலை கோரச் சட்ட ரீதியாகவோ, அடிப்படை ரீதியாகவோ உரிமையில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அதேநேரம் இந்த கருத்து, மற்ற வழக்குகளில் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்துப் பரிசீலிப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+