விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரும், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையருமான ஏ. அருண் ஐபிஎஸ் அதிகாரி, நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜரான நிலையில், நீதிபதிகள் அவரை நீதிமன்றத்திலேயே காத்திருக்கச் செய்த அதிரடி உத்தரவு பெரும் பேச்சுக்குரியதாக மாறியுள்ளது.
இன்று கோடைகால விடுமுறை சிறப்பு அமர்வில், சென்னை மாதவரம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் திட்டம் தொடர்பான மோசடி வழக்கில் சந்தோஷ் சர்மா மீது போடப்பட்ட குண்டர் சட்ட உத்தரவுக்கு எதிரான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தவுடன் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு, வழக்கைத் தள்ளி வைத்து (Pass Over), ஏ. அருண் ஐபிஎஸ்-ஐ நீதிமன்ற அறையிலேயே காத்திருக்க உத்தரவிட்டது.

நீதிபதிகள் இந்த உத்தரவு அளித்த காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று (மே 26) இந்த வழக்குக்கான சம்மனை வழங்க உயர் நீதிமன்ற பெய்லிஃப் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்குச் சென்றபோது, ஏ. அருண் ஐபிஎஸ்-ஐ சந்திக்க சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். "நீதிமன்ற ஊழியரையே 2 மணி நேரம் காத்திருக்க வைத்தீர்கள் அல்லவா? எனவே நீங்களும் இப்போது காத்திருங்கள்" என்று கூறிய நீதிபதிகளின் இந்தக் கருத்து, நீதிமன்ற மரியாதை குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்தது.
வழக்கின் பின்னணி:
லோகா டெவலப்பர்ஸ் (முன்னாள் ஸ்டைல் ஒன் பிராப்பர்டீஸ்) நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷின் மனைவி பூர்ணஜோதியுடன் மாதவரத்தில் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம் தொடர்பாக கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தார். ஒப்பந்தத்தின்படி பூர்ணஜோதிக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளில் 48 வீடுகளுக்கு போலி கையெழுத்திட்டு முறைகேடாக விற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 42.94 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சந்தோஷ் சர்மா கைது செய்யப்பட்டார். அவர் தொடர்ந்து ஜாமீன் பெற்று வெளிவருவதைத் தடுக்கும் வகையில், 2025 செப்டம்பர் 22 அன்று அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏ. அருண் ஐபிஎஸ், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுதான் தற்போது பெரும் சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.
சந்தோஷ் சர்மாவின் மனைவி கல்பனா சர்மா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், "ஒரு சாதாரண வணிக மற்றும் சொத்து தகராறில் குண்டர் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்?" என்று கடும் அதிர்ச்சி வெளியிட்டனர். "இந்த உத்தரவு எங்கள் மனசாட்சியை உலுக்குகிறது" எனக் கூறிய நீதிபதிகள், சிவில் விவகாரத்தை பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகக் கருதியதற்கான அடிப்படையை விளக்குமாறு ஏ. அருண் ஐபிஎஸ்-ஐ நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.
இன்றைய நீதிமன்ற நடவடிக்கை:
உத்தரவுப்படி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரான ஏ. அருண் ஐபிஎஸ், நீதிபதிகளின் 'வெயிட்' உத்தரவால் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவம் உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
நீதிமன்ற ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை வலியுறுத்தும் வகையில் நீதிபதிகளின் இந்த நடவடிக்கை, அதிகார வர்க்கத்திற்கு ஒரு முக்கிய செய்தியை அளிப்பதாகக் கருதப்படுகிறது. அதிகாரி தரப்பு தங்கள் விளக்கத்தை முழுமையாகச் சமர்ப்பித்த பிறகு, நீதிமன்றம் இறுதி முடிவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதிகார வரம்பு குறித்த புதிய விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை திட்டம்.. தவெக அரசு திருமண உதவித் திட்டம் விரைவில் தொடக்கம் -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
விஜய் ஜாதகத்தில் சுக்கிர திசை! 2034 வரை அசைக்க முடியாது! அண்ணாமலைக்கும் யோகம்! ஷெல்வி கணிப்பு -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
‘குடும்பம் முக்கியம் என்பதை நீங்க காட்டணும்’.. பதவியேற்பில் நடந்த சம்பவம்.. முதல்வர் விஜய்க்கு சமுத்திரக்கனி அறிவுரை -
“இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே”! விஜய்யின் பயிர்க்கடன் ரத்து.. விவசாயிகள் அப்செட் -
நான் அரசியல்ல 15 வருஷமா இருக்கேன்! என்ன யூஸ்? விஜய் மீது பொறாமையா இருக்கு! ஓபனாக சொன்ன பவன் கல்யாண் -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
Vijay Vs Udhayanidhi: எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? விஜய்க்கு உதயநிதி நறுக் கேள்வி -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை!












Click it and Unblock the Notifications