Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நோ மீன்ஸ் நோ.. இளையராஜா பாடல்களை பயன்படுத்த குட் பேட் அக்லி படத்திற்கு நீதிமன்றம் தொடர்ந்து தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் இளையராஜா இசை எப்போதுமே தனித்துவமிக்கது. தன் இசை காப்புரிமை விஷயத்தில் இளையராஜா எப்போதுமே கறாராக இருப்பார். பாடகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், இசை நிறுவனங்கள் என்று பலருக்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளார். அந்த வகையில் அஜித்குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜவின் பாடல்களை பயன்படுத்தியதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தடையை நீக்க கூறி அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸின் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

காப்பி ரைட்ஸ் விவகாரம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இளையராஜா தொடங்கி நயன்தாரா ஆவணப்படம் வரை காப்பி ரைட்ஸ் தொடர்பாக பல பஞ்சாயத்துகள் நடந்துள்ளன. அதிலும் இசைத்துறையில் காப்புரிமை பிரச்சனை காட்டு தீ போல பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக இருப்பது வழக்கம்.

chennai-high-court-stay-continues-for-good-bad-ugly-movie-to-use-ilayaraja-songs

இளையராஜா காப்பி ரைட்ஸ்

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தொடங்கி, நடிகர் அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' படம் வரை பலருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார். சமீபத்தில் கூட சோனி உள்ளிட்ட பிரபல இசை நிறுவனங்கள் மற்றும் சில யூடியூப் சேனல்களில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதற்கு தடை கேட்டு இளையராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில் இளையராஜா தரப்பு வாதத்தை ஏற்று, வருவாய் நோக்கத்திற்காக அவரின் பெயர், புனைப்பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் இதுதொடர்பாக சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த வரிசையில் இளையராஜா வழக்கில் மற்றொரு தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இளையராஜா Vs குட் பேட் அக்லி

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. தன்னுடைய அனுமதி இல்லாமல் அந்தப் படத்தில் தன்னுடைய பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

மேலும் குட் பேக் அக்லி படத்தில் இடம் பெற்றிருந்த 'இளமை இதோ இதோ..', 'ஒத்த ரூபாய் தாரேன்..', 'என் ஜோடி மஞ்சக் குருவி..' பாடல்களை நீக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. பட தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இதை எதிர்த்து முறையீடு செய்திருந்தது. அதில் சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு சோனி நிறுவனத்திடம் இருந்து உரிமை வாங்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டிருந்தது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தொடரும் தடை

அப்போது இளையராஜா தரப்பில், "சட்டப்படி பாடல்களுக்கான உரிமை இசையமைப்பாளர்களிடம் தான் உள்ளது. படத்தயாரிப்பாளர்கள் அதை மூன்றாம் நபருக்கு விற்க முடியாது." என்று வாதிட்டனர். அதற்கு மைத்ரி நிறுவனம் தரப்பில், "படத்தயாரிப்பு நிறுவனத்திடம் தான் பாடல்களுக்கான உரிமை உள்ளது. ஒருவேளை இளையராஜாவிடம் பாடலுக்கான உரிமை இருந்தால் அதை அவர் தான் நிரூபிக்க வேண்டும்." என்று வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட செந்தில் குமார், "தன் அனுமதியில்லாமல் பாடல்கள் பயன்படுவத்தை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உள்ளது. எனவே இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் தலையீட போதிய காரணம் இல்லை." என்று கூறி மைத்ரி மூவி மேக்கர்ஸின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்துவதற்கான தடை தொடர்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+