அமலாக்க துறை சம்மனுக்கு தடை, ஆனால் விசாரணை தொடரலாம்.. மணல் குவாரி விவகாரம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி கலெக்டர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப். 12ஆம் தேதி தமிழகத்தில் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகளில் அமலாக்க துறை ரெய்டு நடத்திய நிலையில், அதில் ரூ.12.82 கோடி ரொக்கம், 1024 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளது.

இதற்கிடையே இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது என்றும் சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும், அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற அவர், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கனிம வள குற்றங்கள் தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். அதாவது மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்ல என்பதே தமிழக அரசின் வாதமாக இருந்தது.
அதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்தியத் தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கு சம்பந்தமான விவரங்களை விசாரணைக்கு உதவியாகத் தான் கேட்கப்பட்டது என்றும் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விசாரணைக்கு உதவி செய்யக் கேட்பதும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளதாக குறிப்பிட்டனர். சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. விசாரணை தான் நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கனிம வள சட்ட வழக்குகளை அமலாக்கத் துறை விசாரிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர் மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் தான் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் அதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு மீது இன்று (நவ. 28) விசாரணைக்கு உத்தரவிடுவதாகக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இந்த வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமலாக்கத் துறை சம்மனுக்கு மட்டுமே தடை, விசாரணைக்குத் தடையில்லை என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். தமிழக அரசின் வழக்குகள் விசாரணைக்கு உகந்தது தான் என்ற சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், அமலாக்கத் துறை ஆட்சேபனை மனுவுக்குப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் மூன்று வார அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
மேலும், குறுகிய காலத்தில் இந்த வழக்கில் பதில் அளித்த அமலாக்கத் துறைக்கும் சென்னை ஐகோர்ட் பாராட்டு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் டிச. 19ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications