3 வயது குழந்தையை கொன்று சூட்கேஸில் வீசிய கொடூரம்! பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்ய கோர்ட் உத்தரவு
சென்னை: மூன்றரை வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை, முன்கூட்டி விடுதலை தொடர்பான அரசாணையின் அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவரது மனு முதலில் நிறுத்தி வைக்கப்பட்டு பிறகு தற்போது விடுதலை குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்ய மறுத்த ஆண் நண்பரின் மூன்றரை வயது குழந்தையை கடத்திச் சென்று, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன், உடலை சூட்கேசில் அடைத்து, பேருந்தில் விட்டுச் சென்றதாக தொடரப்பட்ட வழக்கில், பூவரசி என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில், மறைந்த முதல்வர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு, 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு 2021ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், பூவரசியை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி, அவரது கணவர் மணிகண்டன் அரசுக்கு மனு அளித்துள்ளார். கொடுங்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்த விண்ணப்பத்தை அரசு நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மணிகண்டன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. மணிகண்டன் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.மனோகரன், தமிழக அரசு உத்தரவின்படி, 10 ஆண்டுகள் தண்டனையை பூர்த்தி செய்த பூவரசியை முன்கூட்டி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பூவரசியின் நடத்தை குறித்து அறிக்கை அளிக்கும்படி நன்னடத்தை அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி நன்னடத்தை அதிகாரி அளித்த அறிக்கையில், பூவரசியை முன்கூட்டியே விடுதலை செய்வதால் அவரது உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பூவரசி, செய்த தவறுக்காக வருந்தியிருப்பார். சமுதாயத்தில் மீண்டும் இணைந்து அமைதியான வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற அடிப்படையில், அரசு உத்தரவின்படி 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த அவரை உடனடியாக முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications