சென்னை அருகே அதிர்ச்சி! மீஞ்சூரில் வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு! அந்த 3 பேர் யார்?
சென்னை: சென்னையை அடுத்த மீஞ்சூரில் வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
மீஞ்சூரில் மசூதி தெருவில் செமஸ்டர் தேர்வுக்கு ஒரு கல்லூரி மாணவி படித்துக் கொண்டிருந்தாராம். அப்போது இரவு 10 மணிக்கு வீட்டிற்குள் புகுந்த 3 பேர் அந்த 17 வயது மாணவியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனால் மாணவியின் கை, பின்னந்தலை, கால்களில் சரமாரி வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்ததை அடுத்து மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
அந்த மூவரில் ஒருவரை மட்டும் அக்கம்பக்கத்தினர் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த நபர் கஞ்சா போதையில் இருந்ததாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால் அவர் கஞ்சா பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.
இந்த பகீர் சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, அன்புமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை,
பாலியல் வன்கொடுமை,
கொலை முயற்சி,
இது தான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று
@mkstalin
துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-
இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்! என தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை, கஞ்சா போதையில் வீட்டினுள் புகுந்த கும்பல், பட்டாக்கத்தியால் வெட்டி, மாணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.












Click it and Unblock the Notifications