சென்னை வேளச்சேரியில் தரமற்ற உணவை விநியோகித்ததாக பிரபல உணவகம், ஜொமாட்டோவுக்கு அபராதம்
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர் வேளச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் தரக்குறைவான உணவு விநியோகத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம், உணவு சாப்பிட்ட ஜெகபிரபு நாராயணசாமிக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனம் மற்றும் குறிப்பிட்ட உணவகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மக்கள் உணவை ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிடுவது அதிகமாக உள்ளது. ஏனெனில் வீட்டிற்கே உணவு வந்துவிடுவதால், பிரபல கடைகளில் போய் சாப்பிடாமல் ஆர்டர் செய்தே உணவை சாப்பிடுகிறார்கள். அப்படி ஆர்டர் செய்யும் கடைகளின் தரம் சரியானதாகவும், உயர்வானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால் சில நேரங்களில் பெரிய பெரிய பிரியாணி கடைகளிலேயே உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவங்கள் நடக்கின்றன. தரமற்ற உணவு தயாரித்த உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சில நேரங்களில் சில நாட்கள் உணவகங்கள் சீல் வைக்கப்படுகின்றன. அதேநேரம் உணவகங்களில் சாப்பிடுவோர், சாப்பாட்டின் தரத்திற்காக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர முடியும். அப்படி வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் சாதமாக உத்தரவினை பிறப்பித்துள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெகபிரபு நாராயணசாமி என்பவர் வேளச்சேரியில் உள்ள அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிட விரும்பி உள்ளார். இதற்காக ஜொமாட்டோ மூலம் குறிப்பிட்ட ஆந்திர மெஸ்ஸில் அசைவு உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட பின்னர் ஜெகபிரபுக்கு மூச்சுத்திணறல், தலைச் சுற்றல், மாரடைப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய ஜெகபிரபு, இது குறித்து உணவுத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்தாராம்.
இதனையடுத்து, அந்த உணவகத்தில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதை கண்டறிந்து 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, ஜொமாட்டோ மற்றும் வேளச்சேரியில் உள்ள அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்ஸுக்கு உத்தரவிடக்கோரி ஜெகபிரபு சென்னை வடக்கு நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம், சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட உணவகம் மற்றும் ஜொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனம் இணைந்து பாதிக்கப்பட்ட ஜெகபிரபுவுக்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவாக 5,000 ரூபாய் என மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications