குடிபோதையில் பிரேம்குமார் செய்த பயங்கரம்.. அநியாயமாக பறிபோன கோமதியின் உயிர்.. சென்னையில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்யாணம் ஆகி 15 வருசம் ஆகியும குழந்தை இல்லாத விரக்தியில் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவர், திடீரென பயங்கரமாக தாக்கியதில் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை சென்னை புது வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோவில் சிவகாமி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் 48 வயதாகும் பிரேம்குமார், தனியார் ஏஜென்சியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி கோமதிக்கு 37 வயதாகிறது. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது வரை குழந்தைகள் இல்லை. இதனால் பிரேம்குமார் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

குழந்தை இல்லை

குழந்தை இல்லை

இதற்கிடையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோமதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் தற்போது வரை சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குழந்தை இல்லாத காரணத்தால் பிரேம்குமார் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி கோமதியுடன் தகராறு செய்து வந்துள்ளார். அத்துடன் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது.

பலத்த காயம்

பலத்த காயம்

கடந்த மார்ச் 21ம் தேதி வழக்கம் போல் பிரேம்குமார் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கோமதியை அடித்து உதைத்திருக்கிறார். இதில் இடது கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்த கோமதியை அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சிகிச்சைக்காக உறவினர்கன் சேர்த்துள்ளார்கள்.

கோமதி உயிரிழப்பு

கோமதி உயிரிழப்பு

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக கோமதியின் தாயார், தனது மகளை பிரேம்குமார் தலையில் அடித்துக்கொன்று விட்டதாக புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சென்னையில் பரபரப்பு

சென்னையில் பரபரப்பு

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்னர். அத்துடன் பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்துக் கணவர் கொலை செய்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+