சாதித்து காட்டும் சென்னை ஐசிஎஃப்! பிரான்ஸ் தொழில்நுட்பத்தில்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்!
சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்படி உற்பத்தியாகும் ரயில்களுக்கு பிரான்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை தற்போது வரை உட்கார்ந்து செல்லும் வகையில்தான் பயன்பாட்டில் இருக்கின்றன. விரைவில் படுத்துக் கொண்டு பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே துறை கூறியிருந்தது. இப்படியான ரயில்கள் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நவீன தொழில்நுட்பத்தை பிரான்ஸ் நிறுவனம் கொடுத்திருக்கிறது.

அதாவது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'Alstom' எனும் நிறுவனம் ரயில்களுக்கான நவீன தொழில்நுட்ப உபகரணங்களை தயாரித்து கொடுத்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் கொடுத்த தொழில்நுட்பங்களில் ஏராளமான ரயில்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனத்துடன் ஐசிஎஃப் ரூ.1285 கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் 'மிட்ராக் இழுவை உதிரி பாகங்கள்' மற்றும் பிற மின் உபகரணங்களை இந்நிறுவனம் வழங்குகிறது.
ரயில் தயாரிப்புகளுக்கு மிட்ராக் இழுவை உதிரிபாகங்கள் மிக முக்கியமானதாகும். நம்மூரில் தயாரிக்கும் உதிரிபாகங்கள் அந்த அளவுக்கு திறன் வாய்ந்ததாக இருப்பதில்லை. ஆனால் 'Alstom' நிறுவனத்தின் உதிரிபாகங்கள் சர்வதேச தரம் வாய்ந்தவை.
உதாரணத்திற்கு தென்னிந்தியாவில் இயக்கப்படும் ரயில் என்ஜின்களில் வெப்பமண்டல பகுதிகளுக்கு ஏற்ப சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும். அதேபோல வடகிழக்கு மாநிலங்களில் இயக்கப்படும் ரயில் என்ஜின்கள், மழை காலநிலைக்கு ஏற்ப மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும். ஜம்மு-காஷ்மீர், இமய மலையை ஒட்டி இயக்கப்படும் ரயில் என்ஜின்கள் அந்த கால சூழலுக்கு ஏற்பட மாற்றப்பட்டிருக்கும்.
ஆனால் Alstom நிறுவனத்தின் மிட்ராக் இழுவை உதிரி பாகங்கள் கொண்டு தயாரிக்கப்படும் என்ஜின்கள் எல்லா காலநிலைக்கும் ஏற்றவையாக இருக்கும். அதாவது இந்த தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் ரயில் என்ஜினை நம்மால் ஜம்மு காஷ்மீரில் கூட பயன்படுத்த முடியும்.
மட்டுமல்லாது ரயிலை ஓட்டுபவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப என்ஜினில் சில வசதிகளை செய்துக்கொள்ளலாம். இதன் மூலம் மிருதுவான பயணம் சாத்தியமாகும். அதேபோல பிரேக் பயன்படுத்தும்போது ரயில் பெரிய அளவில் அலுங்காமல், குலுங்காமல் இருக்கும்.
தவிர, இந்த உதிரிபாகங்கள் நம்பகத்தன்மையானதாகவும், உயர் செயல்திறன் மிக்கதாகவும், குறைந்த ஆற்றலில் இயங்கும் வகையிலும் இருக்கிறது. சாதாரண என்ஜின்கள் உறுஞ்சும் மின்சாரத்தை விடவும், இந்த உதிரிபாகங்களால் செய்யப்பட்ட என்ஜின்கள் குறைந்த மின்சாரத்தையே உறுஞ்சுகின்றன. ஆகவே மிட்ராக் இழுவை உதிரி பாகங்களை கொண்டு 17 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்த ரயில்கள் 160-180 கி.மீ வேகத்தில் இயங்கும்.
இப்படியான ரயில் என்ஜின்கள் 2027ம் ஆண்டு முதல் உருவாக்க தொடங்கப்படும். 2029ல் இவை பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே துறை தெரிவித்திருப்பதாக DTNext செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications