தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை... வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. .
சென்னை வானிலைஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி திண்டுக்கல், ஈரோடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

9 மாவட்டங்களில்
அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி, குறைந்த பட்சம் 27 டிகிரி செல்சியஸை ஒட்டிஇருக்கும்.

தமிழகத்தில் மழை
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்(சென்டி மீட்டரில்): அகரம் சீகூர்(பெரம்பலூர்), வல்லம் (விழுப்புரம்) தலா 12, செஞ்சி (விழுப்புரம்) 11, வீரகனூர் (சேலம்) பொண்ணை அணை (வேலூர்) ஆரணி (திருவண்ணாமலை), கீழச்சேருவை(கடலூர்) தலா 7, சோளிங்கர் (ராணிப்பேட்டை) 6, விருதாச்சலம் (கடலூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) தலா 5, திருத்தணி (திருவள்ளூர்), தருமபுரி தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது.
Recommended Video

கடலுக்கு செல்ல வேண்டாம்
ஜுன் 29ம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வரை வீசும், எனவே, மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். இதேபோல் இன்று முதல் ஜூலை 3ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications