கொரோனாவால் சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி மரணம்- முதல்வர் எடப்பாடி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவால் சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி மரணம் அடைந்துள்ளதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Chennai Inspector Balamurali dies of Corona- CM Edappadi Palanisamy condles

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த சென்னை - மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்களை இழந்துவாடும் அவர்தம் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்!

திரு.பாலமுரளி அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல்: சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு. பாலமுரளி , கொரோனா காரணமாக உயிர் இழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது உயிர்த்தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறேன்!

மக்களைக் காக்கும் பணியில் இருந்த ஆய்வாளரே உயிரிழக்கிறார்! இத்தகையோரின் பாதுகாப்பை எப்பொழுது இந்த அரசு உறுதிப்படுத்தும்?. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட இரங்கல்:

மக்களுக்காகப் பணியாற்றி கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி உயிரிழந்தார் எனும் செய்தியறிந்து துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உடன் பணியாற்றிய காவலர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+