Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பெரிதாகிறது.. 200 வார்டுகள் 300 ஆக உயர்த்தப்படுகிறது? தெரு தெருவாக ரெய்டு விடும் அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை விரிவாக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து, தமிழக மாநிலத் தேர்தல் ஆணையர் தலைமையிலான வார்டு மறுசீரமைப்புக் குழு ஆராய்ந்து வருகிறது. தற்போதுள்ள நகரின் பெரிய வார்டுகளைப் பிரிப்பதன் மூலமும், பழைய மகாபலிபுரம் சாலை (OMR) வழித்தடத்தில் திருப்போரூர் வரையிலான சில உள்ளாட்சி அமைப்புகளை சென்னையுடன் இணைப்பதன் மூலமும் இந்த விரிவாக்கம் செய்யப்படலாம்.

மாநில அரசு ஏற்கனவே அறிவித்தபடி, சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை தற்போதுள்ள 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட உள்ளது. புதிய வார்டுகள் உருவாக்கம், அவற்றின் எல்லைகள், வார்டுகளின் எண்ணிக்கை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பலம் ஆகியவற்றை தமிழக வார்டு எல்லை மறுசீரமைப்புக் குழுவே நிர்ணயிக்கும்.

chennai voting vote

தமிழக வார்டு எல்லை மறுசீரமைப்புக் குழு

புதிய வார்டுகள் தற்போதைய மாநகராட்சி எல்லைக்குள்ளேயே உருவாக்கப்படும் என்றும், தாம்பரம் அல்லது ஆவடி போன்ற அண்டை மாநகராட்சிகளில் இருந்து வார்டுகள் பிரிக்கப்படாது என்றும் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. "தாம்பரம் மற்றும் ஆவடி போன்ற பகுதிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், புதிய வார்டுகளை இவற்றுள் இருந்து பிரிக்க முடியாது. நகருக்குள் உள்ள பெரிய வார்டுகளைப் பிரிப்பதே விரிவாக்கத்திற்கான ஒரே சாத்தியமான வழி. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு வார்டு மறுசீரமைப்புக் குழு தனது பணிகளைத் தொடங்கும்," என கூறப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைத்து, நகர்ப்புறங்களை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி மாதம், வானகரம் மற்றும் அடையாழம்பட்டு ஆகிய இரண்டு கிராம பஞ்சாயத்துகளை சென்னை மாநகராட்சிக்குள் கொண்டு வர மாநில அரசு முன்மொழிந்தது.

விரிவாக்கப்படும் சென்னை மாநகராட்சி

ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகத்தின் கீழ் தற்போதுள்ள சோழிங்கநல்லூர் முதல் திருப்போரூர் வரையிலான பகுதிகள் சென்னை மாநகராட்சிக்குள் இணைக்கப்படலாம் என நகராட்சி நிர்வாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றுடன் மேடவாக்கம், பெரும்பாக்கம், கோவளம்பாக்கம் போன்ற பகுதிகளும் சேர்க்கப்படலாம் என்றும், இது குறித்த இறுதி முடிவு குழுவின் கையில் தான் உள்ளது.

மாநிலத் தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி தலைமையில் செயல்படும் இந்தக் குழுவில், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

OMR பகுதி உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ப்பதற்கான முன்மொழிவு குறித்து கருத்து தெரிவித்த OMR குடியிருப்பு சங்கங்களின் கூட்டமைப்பின் இணை நிறுவனர் ஹர்ஷா கோடா, நிதி மற்றும் திறன் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் கிராம பஞ்சாயத்துகளுக்கு இது பெரிதும் உதவும் என்று கூறினார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணியின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை சுமார் 10% அதிகரித்து 68,467-லிருந்து 75,035 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

SIR கணக்கெடுப்பு முடிவடையும் நிலையில், புதிய சீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிப் பட்டியலின்படி வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பட்டியலை இறுதி செய்ய, 234 தேர்தல் பதிவு அதிகாரிகளும், 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்தனர்.

வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள இடங்களில் புதிய மையங்கள், பிரிவுகள் மறுசீரமைப்பு, இட/பெயர் மாற்றம், வாக்குச்சாவடி இணைப்பு போன்றவற்றை அளவுகோலாகக் கொண்டு இச்சீரமைப்பு நடந்தது. வாக்காளர்கள் 2 கி.மீ.க்கு அப்பால் பயணிக்காமல் வாக்களிக்கவும், தடை செய்யப்பட்ட வளாகங்கள் அல்லது கட்சி அலுவலகங்கள் 200 மீட்டருக்குள் இல்லாமல் வாக்குச்சாவடிகள் அமையவும் இது வழிவகுத்தது.

இந்த சீரமைப்புக்கு முன் 68,467 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது 6,648 புதிய மையங்கள் சேர்க்கப்பட்டு, 80 இணைக்கப்பட்டு, 2,509 மாற்றப்பட்டு, 7,752 இடங்களில் பிரிவுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 6,568 வாக்குச்சாவடிகள் அதிகரித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+