சென்னையே உடையுதா? தென்காசி பிரியுதா? தமிழகத்தில் என்ன நடக்குது? திமுகவின் "அதிகார" எல்லை சுருங்குதா?
சென்னை: புதிய மாறுதல்கள் விரைவில் திமுகவுக்குள் ஏற்படலாம் என்கிறார்கள்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், முக்கிய முடிவு எடுப்பாம் என்றும் திமுக நிர்வாகிகள் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.. என்ன நடக்கிறது திமுகவில்?
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. அனைத்து கட்சிகளும் இதற்காக மும்முரமாகி வருகின்றன.. அந்தவகையில், திமுகவும் களத்தில் குதித்துள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டமும், மண்டல அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

எனினும், சில மாவட்டங்களில், அதிருப்திகளும், உட்கட்சி பூசலும், கோஷ்டி விவகாரங்களும் இன்னமும் வட்டமிடுவதாக தெரிகிறது. இதுபோக, சில நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படாமலும் இருக்கிறார்களாம்.
மாவட்ட செயலாளர்கள்: இது குறித்தெல்லாம் முதல்வரிடம், புகார்கள் கொண்டு செல்லப்பட்டன.. இறுதியில், தென்காசி உள்ளிட்ட பிரச்சினை உள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு, தலைமை கழக நிர்வாகிகளுக்கு முதல்வரும் அறிவுறுத்தியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் 2 மாதங்களுக்கு முன்பு, "2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்" என்ற வியூகத்தை திமுக கையிலெடுகக போவதாக செய்திகள் கசிந்தன..
அதாவது, திமுகவில் தற்போது 2 சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் சில இடங்களில் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், சில மாவட்டங்களில் 3 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர், 5 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் இருக்கிறார்கள். அதனால்தான், இதனை பிரிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாம்.
ஆலங்குளம்: உதாரணத்துக்கு, நெல்லை கிழக்கு மாவட்டத்தில், ராதாபுரம், நாங்குனேரி அம்பை தொகுதிகளும், தென்காசி தெற்கு மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் தொகுதிகளும் உள்ளன.. இங்கெல்லாம் கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், ஆலங்குளம், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு ஒரு புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்கலாமா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடந்திருக்கிறது.
குறிப்பாக, சென்னையிலும், அம்பத்தூர், மதுரவாயல் தொகுதியை உள்ளடக்கி ஒரு புதிய மாவட்ட செயலாளரை நியமிப்பது, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிப்பது, என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்ருக்கிறது..
இவைகளை முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கும் அப்போதே கொண்டு சென்றுள்ளனர்.. ஆனால், இந்த ஐடியாவுக்கு முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லையாம். "பிறகு பார்த்து கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டாராம்.
சமரசம்: தற்சமயம் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சினை தீராமலேயே உள்ளதால், எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை அதிகம் உள்ளதோ, அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, இந்த சமரச முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
எனினும், தேர்தல் சமயத்தில் கோஷ்டி பூசல் இன்னும் அதிகமாகிவிடும் என்ற கலக்கம் நிர்வாகிகளை வெகுவாகவே சூழ்ந்துள்ளது. அதனால்தான், அதிமுகவில் இருப்பதை போலவே, "2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்" என்ற நடைமுறையை கொண்டுவந்தால், அதிமுகவுக்கு சரிசமமாக ஈடுகொடுக்க வசதியாக இருக்கும் என்று, முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட உள்ளதாம்.
அமைப்பு செயலாளர்: அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ள நிலையில், இங்கு மாவட்ட செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர செயலாளர்களும் பொறுப்பில் உள்ளனர். இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன. இவைகளில், ஒருங்கிணைப்பு இல்லாத மாவட்டங்களில் மட்டும், 2 சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மாவட்டங்களை பிரித்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனையையும், முதல்வரிடம் கொண்டு செல்ல போகிறார்களாம்.
எப்படியும், டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்வார் என்ற பெருத்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள் திமுகவின் முக்கிய நிர்வாகிகள்... எனினும்,
விரைவில் முடிவு: எல்லையை சுருக்கினால் பணிகள் வேகமாக நடைபெறும் என்ற கருத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்பாரா? புதிய மாவட்ட செயலாளர்களை விரைவில் நியமிப்பாரா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications