Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகையை "சாய்த்த" அர்ச்சகர்.. பல விஐபிகளுக்கு தொடர்பாமே.. சென்னை போலீசுக்கு ஓடிய பெண்ணால் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரசாதத்தில் மயக்க மருந்து தந்து, தன்னை அர்ச்சகர் பலாத்காரம் செய்துவிட்டதாக, சமீபத்தில் நடிகை ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மற்றொரு புகாரை நடிகை தற்போது தெரிவித்துள்ளார்.. இது மீண்டும் பரபரப்பை கிளப்பி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு, சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது, பிரபல டிவி நடிகை ஒருவர் சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்திருந்தார்.

Chennai Kaalikambal temple Priest Famous Actress

பூசாரி: அதில், "பாரிமுனை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி, கோயில் தீர்த்தம் தந்தார். அதை குடித்ததுமே மயங்கிவிட்டேன். பிறகு கண்விழித்து பார்த்த போது நான் நிர்வாணமாக படுக்கை அறையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

பிறகு கார்த்திக் முனுசாமியிடம் இதை பற்றி கேட்டதற்கு என்னைஉடனடியாக திருமணம் செய்து கொள்வதாக சொன்னார். அவருக்கு முதல் மனைவி பிரியா இருந்தும், என் வீட்டிலேயே எனக்கு தாலி கட்டினார். இதையடுத்து, நாங்கள் கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தினோம். கருவுற்ற எனக்கு கட்டாயப்படுத்தி அபார்ஷன் செய்தார்.

விஐபி: பின்னர், விஐபி நண்பர் என்று சொல்லி, ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து, நெருக்கமாகவும் இருக்க சொல்லி என்னை கட்டாயப்படுத்தினார்" என்னுடைய வாழ்க்கையை சீரழித்த கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகை கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பூசாரி கார்த்திக் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.. மேலும், அவரது செல்போனிலிருந்து பெண்களின் ஆபாச வீடியோக்களையும் போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.. பூசாரி மீது 6 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட அவரை தேடி வந்தனர்.. வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸும் விடுக்கப்பட்டது..

அர்ச்சகர்: இறுதியில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் நிபந்தனை ஜாமீனிலும் வெளிவந்திருந்தார். ஆனால், இவர் கடந்த ஐந்து நாட்களாக கோர்ட் உத்தரவுகளை மீறி தலைமறைவாகிவிட்டாராம்.. அவர் தரப்பிலிருந்து தனக்கு மிரட்டல்கள் வருவதாக, மறுபடியும் நடிகை புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் வாசலில், செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நடிகை..

அப்போது அவர் சொன்னபோது, "கார்த்திக் முனுசாமி ஜாமீனில் வந்த நிலையில், இந்த நாட்களாகவே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்திடாமல் இருக்கிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் விருகம்பாக்கம் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது கோர்ட் நிபந்தனையாகும். ஆனால் அதை அவர் மீறிவிட்டார். ஜூலை 25ம் தேதி வரைக்குதான் மதுரை காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

அதிர்ச்சி தகவல்: அதற்கு பிறகு மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வழக்கு நடைபெறும் விருகம்பாக்கம் ஸ்டேஷனில் கையெழுத்திடுமாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் இதுவரை விருகம்பாக்கம் காவல் நிலையத்தை வந்து அடையவில்லை என்கிறார்கள்.. அதனால், அவரும் நேரில் வந்து கையொப்பம் விடாமல் தலைமறைவாகியுள்ளார். இதனை போலீஸ் தரப்பிலிருந்தே எனக்கு உறுதி செய்துள்ளனர்.

ஏற்கனவே கார்த்திக் முனுசாமி ஜெயிலுக்கு செல்லும் முன்பு என்னை வெட்டி கொல்ல போவதாக மிரட்டல் விடுத்திருந்தார். அவர் இப்போது தலைமறைவாக வெளியே உள்ளதால் எனக்கு எந்தவித பாதுகாப்பும் கிடையாது. எனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதால்தான் இப்போது போலீசுக்கு வந்துள்ளேன்... என் உயிர் ஆபத்தில் உள்ளதால்தான், ஊடகங்களையும் தேடி வந்துள்ளேன்.

பண பலம்: தன்னுடைய பண பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து பூசாரி கார்த்திக் முனுசாமி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதிகாரத்தில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பதாலும் பண பலம் படைத்தவராக இருப்பதாலும் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஈடுபடுகிறார். அதுமட்டுமின்றி பல விஐபிகள் தொடர்பு அவருக்கு இருக்கிறது. இதனால் அவரை பற்றி மறுபடியும் புகார் அளிக்க உள்ளேன்" என்றார்.

அர்ச்சகர் தலைமறைவாகியிருப்பதாகவும், அவருக்கு பல விஐபிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் நடிகை கூறியிருப்பது மறுபடியும் பரபரப்பை கிளப்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+